பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

tz. zavoc*cvartí’ + 55

திருட்டுச்சொத்தை வாங்குதல் தானே திருடியது போன்ற குற்றமாவது போல, அவதுறைக் கேட்டுக்கொண்டிருப்பதும் குற்றமாகும். s 4 செஸ்டர்ஃபீல்டு தகுதியில்லாத புகழ்ச்சி மறைமுகமான அவதூறாகும் ைபோப் கோழை வஞ்சம் தீர்த்துக்கொள்ளும் முறைதான் அவதூறு. அதைப் பரப்புதலே அவனுக்குப் பாதுகாப்பு. க. ஜான்ஸன் பெ இT விலங்குகளுள் அவதூறு பேசுல்ோனுடைய கடியும், வீட்டில் வளர்க்கும் விலங்குகளுள் இச்சகம் பேசுவோனுடைய கடியும் மிகவும் அபாயகரமானவை. உ டயோகினிஸ் மனப்பகையிலிருந்து அவதூறு தோன்றுவது போலச் செருக்கிலிருந்தும் தோன்றும். புறங்கூறுவோனை ஒரு நாகம் தீண்டினால், நாகமே மடியும். பல செவிகள் திறந்திராவிட்டால், பல வாய்களும் திறந்திருக்க மாட்டா. அ பிஷப் ஹால் கோள் சொல்பவன் புறங்கூறுவ்ோனுக்குச் செவி சாய்க்க வேண்டாம்; அவன் மற்றவர்களின் அந்தரங்கங்களைக் கண்டுபிடித்து வெளியிடுவது போலவே உன்னிடத்தும் அடுத்த தடவை செய்வான். அ. சாக்ரடிஸ் அவதுறை அடக்குவதற்கு அதை அலட்சியமாகத தள்ளிவிடுவதே முறை. அதை எட்டிப் பிடித்து மறுக்க முயன்றால், ஒட்டத்தில் அது உன்னை முந்திவிடும். ് அ. டுமாஸ் தன் எதிரியை இழிவு செய்வதற்காக ஏதாவது கதைகளைக் கட்டுவதற்குத் தேவையான கற்பனா சக்தி இல்லாதவன் எவனுமில்லை. - அடிலன் அறம் கூறான். அல்ல செயினும். ஒருவன் புறங்கூறான் என்றல் இனிது. - திருவள்ளுவர் புறம் கூறிப் பொய்த்துஉயிர் வாழ்தலின், சாதல் அறம் கூறும் ஆக்கம் தரும். அ. கிருவள்ளுவர்