பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப. ராமஸ்வாமி 中 57 எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின். உ திருவள்ளுவர் கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது தூக்கம் கடிந்து செயல். அ. திருவள்ளுவர் துன்பம் உறவரினும் செய்க. துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை. க. திருவள்ளுவர் இசையாது எனினும், இயற்றியோர் ஆற்றல் அசையாது நிற்பதாம் ஆண்மை. உ நாலடியார் அவமரியாதை அவமரியாதையாக நடப்பதற்கு ஒருவனுக்கு எப்படி உரிமை யில்லையோ, அதுபோலவே அவமரியாதையாய்ட் பேசவும் உரிமை கிடையாது; மற்றொருவனை அடித்துக் கீழே தள்ள ஒருவனுக்கு எப்படி உரிமையில்லையோ, அதுபோலவே முரட்டுத்தனமாய்ப் பேசவும் அவனுக்கு உரிமையில்லை. அ. ஜான்ஸன் முன்னதாகத் திட்டமிட்டுச் செய்த அவமரியாதக்கு நஷ்டஈடு பெறவேண்டாம்; அதை மறந்துவிடு; அதை மன்னித்துவிடு. ஆனால், அப்படிச் செய்தவனிடமிருந்து வெகுதூரம் ஒதுங்கிவிடு. அ ல வேட்டர் ஒருவன் சந்தர்ப்பம் அறியாமல் பேசுதலும், பேசிக்கொண் டிருக்கும் மற்றவர்களின் கவனத்தைத் தன்பால் இழுத்தலும், தன்னைப்பற்றியே பேசுதலும், தான் எவர்களுடன் இருக் கிறானோ அவர்களை மதியாமலிருத்தலும் அவனை அவமரி யாதை என்ற குற்றமிழைத்தவனாகச் செய்யும். = பிளெபரோ வெட்கத்தை உணர முடியாதவனும், அச்சத்தை அறியாத வனுமான ஒருவன் அவமரியாதையின் சிகரத்தை அடைந் தவனாவான் - மினாண்டர்