பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 H: உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் அறிவினால் வழிகாட்டப்பெறும் செயலே தலைசிறந்தது. க. டி. டபுள்யு. பால்மெர் அறிவில் உண்மையான முன்னேற்றம் பெற விரும்புவோன் தன் முதுமையையும் இளமையையும் பின்னால் பெற்ற நன்மைகளையும், முன்னால் அடைந்த பலன்களையும் உண்மையின் பலிபீடத்தில் சமர்ப்பிக்க வேண்டும். க பெர்க்வி எல்லா விஷயங்களையும் நாம் அறிந்துகொள்ள வேண்டுவது அவ்வளவு முக்கியமில்லை. ஆனால், அதனதன் மதிப்பை உணர்ந்துகொள்வதுதான் அவசியம். நாம் கற்றுக் கொண்டதைப் போற்ற வேண்டும். நமக்குத் தெரிந்தவைகளை முறைப்படுத்தி வைத்துக்கொள்ளவேண்டும். அ எச். மூர் நாம் சொற்ப விஷயங்களைப்பற்றி மட்டும் அறிந்திருந்தால் எதையும் துல்லியமாகத் தெரிந்திருக்க முடியும் அறிவு பெருகும் பொழுது ஐயமும் பெருகுகின்றது. க. கதே அரசாங்கத்திற்கு உண்மையான அடிப்படை அறிவுடைமை, அறியாமை அன்று. கல்வியைப்பற்றியோ, கலாசாரம் பற்றியே மனித சமூகத்தின் அறிவுப் பொக்கிஷங்களான நூல்களைப் படிப்பதுபற்றியோ ஏளனம் செய்தல், அறிவு நுட்பத்தோடு சுதந்தரமாயிருப்பதை ஏளனம் செய்தல் தேச சமூகம் தாழ்மையுற்று அழிவடைய வழியாகும். க. ஜி. டபுள்யு கர்ட்டிஸ் செல்வம் பெருகப்பெருக அதில் ஆசை அதிகமாவது போல. அறிவு பெருகப்பெருக அதில் ஆர்வம் அதிகமாக வளரும் - ஸ்டெர்னி அறிவுடைமையால் வரும் இன்பமும் மகிழ்ச்சியும் இயற்கையில் கிடைக்கும் மற்றவைகளைவிட மிகவும் மேலானவை. மற்ற இன்பங்களிளெல்லாம் தெவிட்டுதல்