பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 to: உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் வாழ்க்கை பெரிய தியாகங்கள் அல்லது கடமைகளால் ஆக்கப்படுவதன்று. ஆனால், சிறு விஷயங்களே அதை அமைக்கின்றன. புன்னகைகள், அன்பு அடிக்கடி செய்யும் சிறு உதவிகள் ஆகியவைகளே வெற்றியடைகின்றன: இதயத்திற்கு ஆறுதலளிக்கின்றன. இன்பமளிக்கின்றன. - - க பெர். எச். டேவி மிகச்சிறிய ஐந்துவாகிய மனிதனுக்கு மிகவும் அற்பமானது என்று எதுவுமில்லை. சிறு விஷயங்களை அறிவதனாலேயே நாம் இயன்றவரை நம் துயரத்தைக் குறைத்துக்கொண்டு அதிக அளவு இன்பத்தை அடைகிறோம். A ஜாள்லைகள் அற்ப விஷயங்கள் நிறைவ்ை உண்டாக்கும். ஆனால், நிறைவு அற்பமானதன்று. க. மைக்கேல் ஏஞ்சலோ அற்பம் என்று ஒதுக்கத்தக்கது எதுவுமில்லை - எதுவுமே இல்லை. அ. காலெரிட்ஜ் அற்பமான பயனற்ற விஷயங்களில், அவைகளுக்கு உரிய நேரத்திற்குக் கூடுதலாகச் செலவழிப்பதைவிட, ஒர் அறி வாளிக்குத் தகுதியில்லாததும். வருத்தப்படத்தக்கதும் வேறு எதுவுமில்லை. ൽ ിബേചേ இறைவனுடைய நன்னெறி என்ற உலகில் அற்ப விஷயங்கள் என்பவையே கிடையா. இன்று உண்மையான ஒரு வார்த்தை கூறின்ால். அது யுகக்கணக்காக ஒலித்துக்கொண்டே இருக்கும். 'க புள்ஷாள் நாம் அற்பமானவை என்று ஒதுக்கித்தள்ளும் செயல் களிலேதான் இன்பத்தின் விதைகள் அமைந்திருப்பதால் அவை வீணாகின்றன. த ஜியார்ஜ் எலியட் 'பெரிய அளவில் நல்ல காரியத்தை உடனே செய்ய வேண்டுமென்று காத்திருப்பவன் ஒரு போதும் எதையும் செய்யப்போவதில்லை. என்று ஜான்ஸன் கூறியிருப்பது