பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/86

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: ப. ராமஸ்வாமி == 85 அவா இல்லார்க்கு இல்லாகும் துன்பம். அ. திருவள்ளுவர் தூஉய்மை என்பது அவா இன்மை. அ. திருவள்ளுவர் குருடனைக்காட்டிலும் குருடன் எவன்? ஆசையுள்ளவன். அ ஆதிசங்கரர் ஆசையற்றவனே அகில உலகிலும் மிகப்பெரும் பணக்காரன். அ சுவாமி சிவானந்தர் அவாவினால் உந்தப்பட்ட மனிதர்கள். வேட்டையில் விரட்டப்பட்ட முயலைப் போல், ஒடித் திரிகிறார்கள். ஆதலால், மோக பந்தங்களிலிருந்து விடுதலை பெற விரும்பும் பிக்கு அவாவை ஒழிப்பானாக. அ புத்தர். ஆசையின் தூண்டுதல் சயித்தான் நம்மைத் தூண்டுவதில்லை. நாம்தாம் அவனைத் துண்டுகிறோம் அவனுடைய திறமைக்கு வாய்ப்பளிக்கிறோம். அ. ஜியார்ஜ் எலியட் ஓர் ஆசைத் தூண்டுதலை எதிர்த்து அடக்குதல், பல பிரார்த்தனைகள் செய்வதைவிட ஆண்டவனுக்குச் சிறந்த வழிபாடாகும். அ பென் நம் முன்னேயே தீமை இல்லாதிருந்தால், வெளியேயிருந்து எவ்வித ஆசைத் துண்டுதலும் ஏற்பட முடியாது. ஆசையின் துண்டுதல் நமது தன்னம்பிக்கையின் மீது படர்ந்துள்ள துருவைத் தேய்த்து அராவும் அரமாகும். அ ஃபெரிைலான் ஆசைத் துண்டுதலை எதிர்த்து நிற்கும் ஒவ்வொரு கணமும் ஒரு வெற்றியாகும். அ ஃபேபர்