பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப. ராமஸ்வாமி * 89 உடல் நலமில்லையானால், மீண்டும் நலமடையும்வரை உபவாசமாயிருக்கவும். இப்படி வாழ்ந்தால் கவலை உங்களை அண்டாது. மருந்துகளை நாய்களுக்குக் கொட்டிவிடலாம். அ டபுள்யு ஹால் ஆரோக்கியத்தைக் காத்துக்கொள்வது ஒழுக்க முறையிலும் சமய முறையிலும் கடமையாகும். ஏனெனில், உடல் நலமே சமூக ஒழுக்க முறைகளுக்கும் அடிப்படையானது. உடல் நலமில்லாதபோது நாம் யாருக்கும் பயன்பட முடியாது. அ ஜான்ஸன் வாழ்க்கை வாழ்வதற்கன்று. ஆரோக்கியமாக இருப்பதற்கே. அ மார்ஷியல் முதலாவது செல்வம், ஆரோக்கியம். அ எமர்பைன் ஆரோக்கியத்திற்கும். நீண்ட கால வாழ்வுக்கும் அவசிய மானவை மதுவை விலக்குதல், திறந்த வெளியிலுள்ள காற்று. எளிதில் செய்யக்கூடிய வேலை. கவலையின்மை ஆகியவை. அ வர் பி. எலிட்னி மகிழ்ச்சி, மிதமான உணவு போதிய ஒய்வு ஆகியவை வைத்தியரை வீட்டுக்குள் விடமாட்டா. அ. லாங்ஃபெல்லோ ஆரோக்கியத்தைப்பற்றி இன்னும் அறிய வேண்டியவை ஏராளமாயுள்ளன. ஆயினும் இதுவரை சிலருக்கு மட்டும் தெரிந்துள்ள விஷயங்கள் எல்லா மக்களுக்கும் தெரிந்திருந் தால், நம் சராசரி வயது இன்னும் சுமார் பத்து ஆண்டுகள் கூடக்கூடும். அ ஜே.பி.எஸ். ஹால்டேன் ஆரோக்கியமுள்ளவனுக்கு நம்பிக்கை இருக்கும் நம்பிக்கை யுள்ளவனுக்கு எல்லாம் இருக்கும். அ அரபுப்பழமொழி முறையான உணவும், பழக்கங்களும் மருந்தைவிட மேலானவை. ஒவ்வொருவரும் தமக்குத் தாமே மருத்து - ~ :