பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/92

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப. ராமஸ்வாமி 13* 91 நண்பர்களுக்கு அவர்கள் விரும்பி ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆலோசனைகளைச் சொல்லவேண்டாம், அவர்களுக்கு மிகுந்த நன்மையளிப்பவைகளையே சொல்லுங்கள். டக்கரிமள் ஆலோசனைகளும், கண்டனமும் மென்மையாயிருக்க வேண்டும். வருத்தமுண்டாக்கும் உண்மைகளை. இதமான சொற்களில் கூற வேண்டும். பயனளிக்க வேண்டிய அளவுக்கு மேல் கூறவும் கூடாது. ச பெrtசிவப் உங்களிடம் ஆலோசனை கேட்கவருபவன் நீங்கள் அவனைப் புகழ்ந்து பேசவே விரும்புகிறான். . வெடf.பீல்டு நல்ல ஆலோசனைமட்டும் சொல்பவன் ஒரு கையால் கட்டடம் கட்டுகிறான். நல்ல ஆலோசனையுடன் தன் நடத்தையையும் மாதிரியாகக் காட்டுபவன் இரு கைகளால் கட்டுகிறான் நல்ல முறையில் கண்டித்துவிட்டுத் தனது தவறான நடத்தையைக் காட்டுபவன் ஒரு கையால் கட்டியதை மறு கையால் உடைப்பவனாவான். ச பேக்கன் நாம் செழிப்புடன் சுகமாயிருக்கும் பொழுது துயரத்தில் வாடுபவர்களுக்கு ஆலோசனை கூறுதல் எளிது. ச ரஸ்ச்சிலன் சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல். திருவள்ளுவர் பொழிந்துஇனிது நாறினும், பூமிசைதல் செல்லாது இழிந்தவை காமுறுஉம் ஈப்போல் - இழிந்தவை தாம்கலந்த நெஞ்சினார்க்கு என்னாகும் தக்கார்வாய்த் தேன்கலந்த தேற்றச்சொல் தேர்வு. . நாலடியார்