பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/95

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| M. | லக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் = பொதுவாகத் தலைசிறந்த அறிவு என்னவென்றால் உறுதி யாகத் rlமானித்தலே அ நெப்போலியன் ஆliறலுடன் ஊக்கமாக உழைப்பதைப்போல வாழ்க்கையில் வேறு அறிவுக்கூர்மை எதுவுமில்லை. அ மிச்சென் ப. முதி சர்வ வல்லமையுள்ளது. உலகில் ஒரு ஸ்தானத்தை அடையவேண்டும் என்று நீ உறுதி செய்துகொண்டால், அதை ரீ நீச்சயமாக அடைவாய். அ ஜே. ஹாஸ் போரிலேகூடப் புற ஆற்றலினும் மன ஆற்றல் மூன்று மடங்காகும். அ நெப்போலியன் பொறுப்புகள் தம்மைக் தாங்கக்கூடியவனைத் தேடிச் செல்கின்றன. எப்படிச் செய்வது என்பதை அறிந்தவனிடம் ஆற்றல் பாய்ந்து செல்கின்றது. அ. இ. ஹப்பார்டு சர்வதேசக் குழப்பம் ஏற்படுவதற்கு அடிப்படையாக உள்ள மனிதர்கள் அச்சத்திற்கும் துவேஷத்திற்கும் இடம் கொடுப்பதாகும். பொருளாதாரத்தகராறுகளுக்கும் இதுவே அடிப்படை பலத்தைப் பெருக்கிக்கொள்ளும் ஆசைக்கும் அச்சமே காரணம். மனிதர்கள் ஆதிக்கம் பெற விரும்புகின்றனர். ஏனெனில், மற்றவர்களுடைய ஆதிக்கம் தங்களுக்கு எதிராக அநீதியாக உபயோகிக்கப்படும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர். ைபெர்ட்ராண்ட் ரஸ்ஸல் அதிகாரமும் சுதந்தரமும் சூடும் குளிர்ச்சியும் போன்றவை. இரண்டும் தக்க அளவில் நன்றாகக் கலந்திருந்தால், எல்லாம் நன்மையாகும்; இரண்டனுள் ஒன்று தனித்திருந்தால், அது அழிவை உண்டாக்கும். அ லைவில்லி அக்கிரமத்தின் மூலம் பெற்ற அதிகாரம். எந்த நன்மையான காரியத்திற்கோ. பயனுள்ள வேலைக்கோ உபயோகிக்கப் படுவதில்லை. அ டாஸிடஸ்