பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

tu. Ziaudarvanuarti' + 97 , ஆன்மா அழிவற்றது என்றும், அதன் வேலை எக்காலத்தும் நித்தியமாகத் தொடர்ந்து நடந்து வருமென்றும் நான் பூரண மாக நம்புகிறேன். இரவில் மறைவதாக நம் கண்களுக்குத் தோன்றும் கதிரவனைப் போன்றது. அது வேறிடத்திற்குத் தன் ஒளியைப் பரப்பவே அது சென்றுள்ளது. அ கதே

  • வாழ்க்கை ஆன்மாவின் பயிற்சிக்கூடம்: அதன் காலம் நித்தியமானது. அ. தாக்கரே
  • எது சிந்தனை செய்கின்றதோ, புரிந்துகொள்கின்றதோ, தீர்மானம் செய்கின்றதோ, செயல் புரிகின்றதோ, அது தெய்விகமானது. அக்காரணத்தால் அது அவசியம் நித்திய மானதாகும். அ எinரோ
  • நாம் நித்தியமான ஒன்றைப் பெற்றிருக்க வேண்டும் அல்லது பெறாமலிருக்க வேண்டும். பெறாமலிருந்தால் நாம் விலங்குகள். ஆதலால், நம் உள்ளே ஆன்மாவைப் பெற்றிருப் பதுதான் நமக்கும் விலங்குகளுக்கும் உள்ள வேற்றுமை என்று நான் கருதுகிறேன். ைகாலெரிட்ஜ்

இசை

  • புலனுணர்ச்சியோடு கூடிய வாழ்க்கைக்கும் ஆன்மிக வாழ்க் கைக்கும் இணைப்பாக இருந்தது இசை, அ பீதோவன்
  • இசை, கவிதையை ஒத்தது. இவை ஒவ்வொன்றிலுமுள்ள எண்ணற்ற மென்மைப் பண்புகளை எந்த வழியிலும் கற்றுக்

கொள்ள முடியாது. ஆனால், வல்லவன் ஒருவன் தானாகவே அவைகளைப் பெற்றுவிடுவான். அ போப்

  • வாத்தியங்களின் இசை மனிதனைப் போரில் முன்னணியில் கொண்டுபோய் நிறுத்திவிடும். விவாதம் செய்வதைவிட இசை அதிக விரைவில் காரியத்தை நிறைவேற்றிவிடுகின்றது. காரண

2. „прJ. - 7