பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


இத்தாலி அரசின் சாதனை:

பள்ளி செல்வதற்குரிய வயது வராத குழந்தைகள் கல்வி அறிவும், உடல் தெளிவும் வலிவும் பெறுவதற்காக, மாண்டிசரி அம்மையார் முனைப்புடன் உருவாக்கிய கல்வி முறையும்; உடல் களைப்பு நிலைபற்றி ஆய்ந்திடும் வகையில் உடற்பயிற்சியும் உடற்கூறும் (Physiology of Exercise) எனும் ஆய்வு வழி முறையை உருவாக்கிய ஏஞ்சலோ மோசி என்பாரின் உயர்ந்த சேவையுமே, இத்தாலிய நாட்டின் உடற்கல்வித் துறை, சிறந்த சாதனை படைத்தது, ஒப்பற்ற சரித்திரத்தை உருவாக்கியது. உலகமும் அவர்களது உன்னத சேவையைப் போற்றி ஏற்றுக் கொண்டிருக்கிறது.

இத்தாலிய நாட்டின் உடற்கல்வி அணுகுமுறை, நமது நாட்டின் உடற்கல்வி முறையுடன் ஒத்திருப்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.