பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உலக நாடுகளில் உடற்கல்வி

101


4.உடற்கல்வியின் இருண்டகாலம்

இருண்ட காலம்

ஏறத்தாழ கி.பி. 476ம் ஆண்டில் மேற்குத் திசையில் கொடி கட்டி ஆண்ட ரோம சாம்ராஜ்யம் சரிந்து வீழ்ந் தொழிந்தது. அவர்களை அழித்து வீழ்த்தி விட்டு, ஆட்சிக்கு வந்தவர்கள் டியூடானிக் காட்டுமிராண்டி பரம்பரையினர் (Teutonic Barbarians) ஆவார்கள். அவர்கள் ஆண்ட காலமே உடற்கல்வியின் இருண்ட காலமாகக் கூறப்படுகிறது.

ரோமின் வீழ்ச்சிக்கான காரணங்கள்

ஏன் ரோம் சாம்ராஜ்யம் காட்டுமிராண்டிகள் கைக்குப் போனது?

உடற்கல்வியின் வரலாற்றை ஆராயும் மாணவர்களுக்கு, ரோம் சாம்ராஜ்யம் அழிந்து போனதற்குரிய காரணத்தை அறியும் பொழுது, ஆச்சரியமாகவும், அதே சமயத்தில் ஒரு படிப்பினையாகவும் இருக்கும்.

1. ரோமானியர்கள் உடலாலும் உள்ளத்தாலும் அழிந்து, நலிந்து போனதே, அவர்களின் வீழ்ச்சிக்குத் தலையாய காரணமாகிறது.

2. அகங்காரத்தாலும், விளங்காத் தனத்தாலும், விளைந்த விவாகரத்துக்கள், வீணான கேளிக்கை விளையாட்டுக்கள், தற்கொலைகள் எல்லாம் அவர்களின் ஜனத்தொகையைக் குறைவு படுத்தின.