பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உலக நாடுகளில் உடற்கல்வி

103


அவர்கள் கும்பலின் சமுதாய ஆக்ரமிப்பு, அவர்களுக்கு மட்டும் பாதுகாப்பு என்பதாக அவர்களின் ஆட்சிமுறை அமைந்தது.

இந்த ஏதும் வளராத சூழ்நிலையைத்தான் இருண்ட காலம் என்றார்கள், அதற்கும் காரணங்கள் இருக்கத்தான் இருந்தன.

டியூடானிக் பரம்பரையினர் கூடாரமடித்து, வெட்ட வெளிப்புறத்தில் வாழும் இயல்பினர். அவர்களின் ஆர்வமும் வாழ்க்கை முனைப்பும், வேட்டையாடுதல், ஆடுமாடுகளை மேய்த்தல், காத்தல்; பயங்கரமான போர்களில் ஈடுபடுதல்; சில சமயங்களில் கடுமை நிறைமதமும் அறிவுக்குழப்பமும்ந்த விளையாட்டுக்களில் பங்குபெறுதல் என்பதிலே இருந்து போனதால், மகிழ்ந்து வாழ்ந்ததால் அதிலே அவர்கள் நோக்கம் கலை, கல்வி போன்றவற்றை நாடவில்லை.

நல்ல உடற்கட்டும், நினைத்ததை சாதிக்கும் உடல் உரமும், எதற்கும் அஞ்சாத நெஞ்சுரமும், கொண்ட டியூடானிக் கூட்டத்தின் முன்னே, சக்தியிழந்த ரோம் மக்கள் சரணடைந்து போனதில் வியப்பேயில்லைதான்.

அவர்கள் ஆட்சியில் வலிமையான, நலம் வாய்ந்த எதிர்கால பரம்பரையை உருவாக்கித் தருகிறோம் என்ற கொள்கையை மட்டுமே ஆட்சியினர் கொண்டிருந்ததால், உடற்கல்வி என்பது ஒரு சிறு பேச்சுக்குக்கூட இல்லாமல், இடமிழந்து போனதுதான், இருண்டகாலமாக மாறிப் போனது.

மதமும் அறிவுக்குழப்பமும் (Asceticism & Scholasticision)

டியூடானிக் ஆட்சியினர் உடல் வளத்தினை மிகுதிப்படுத்த உத்திரவாதம் கொடுத்தாலும், உள்நாட்டுச் சூழ்நிலைகள், உடற்கல்விக்கு உயிரூட்டுவதாக