பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 O டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா பாடங்களைக் கற்றுத் தருவாள். அதாவது பிரபுக்களின் பழக்கவழக்கங்கள் சாப்பாட்டு மேஜையில் விருந்தின் போது நடந்துகொள்ளும் மரபுகள், வீட்டு வேலைகள் முதலிய உயர் தர வாழ்க் கைப் பழக்கங்களைக் கற்றுத் தருவாள். அப்பொழுதே சிறிதளவு உடற் பயிற்சியும் கற்றுக் கொடுக்கப்படும். இந்த வயதில் குத்துச்சண்டை, ஓட்டம். கத்திச் சண்டை, தாண்டிக் குதித்தல் நீச்சல் முதலியவைகளும் கற்றுக் கொடுக்கப்படும். . . . . . 14 வயது வந்ததும். அவன் (Squire) என்று அழைக்கப் படுவான், அவன் ஒரு மாவீரனின் (Knight) உதவியாளனாக அமர்த்தப்படுவான். மாவீரனின் ஆயுதங்களை சுத்தம் செய்தல், குதிரையைக் கவனித்துக் கொள்வது, மாவீரனது காயத்திற்கு மருந்திடுவது, மாவீரன் பிடித்த சிறைக் கைதிகளைக் கண்காணிப்பதுபோன்ற பயிற்சிகளை அவனுக்குக் கொடுத்துப் பழக்குவார்கள். - இந்த வயதிலிருந்து 20 வயது வரையிலும் வேட்டையாடுதல், அரண்களை அளத்தல், குறிபார்த்து அம்பு விடுதல், ஓடிப்பழகுதல், கத்திச் சண்டை போடுதல், குதிரையேற்றம், கயிறு ஏறுதல், மலையேறுதல் போன்ற வற்றில் பயிற்சிகள் அனைத்தையும் கடுமையாகக் கற்றுக் கொள்வான். இவ்வாறாக 21 வயதில் அவன் மாவீரன் (Knight) என்ற பெயரினைப் பெறுகிறான். விருதுடன் தன் சொந்த அரண்மனைக்குப் போகிறான். அங்கே, தூய நீரில் குளித்து, வெண்ணிற ஆடை அணிந்து, இரவு முழுவதும் பூஜையிலும், ஜெபத்திலும் இருந்திட, விடியற் காலையில் மாவீரனைப் பெற்றத் தந்தையான அந்தப் பிரபு, புதிய வீரனன் (மகனின்) தோளின் மீது தன் கத்தியினால் தொட்டு, மாவீரன் என்று பட்டம் தந்து மக்களுக்கு அறிமுகப்படுத்துவார்.