பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 115 இவரது கொள்கை மிகவும் எடுப்பான கொள்கை மட்டுமல்ல. உயிர்ப் பிடிப்பான கொள்கையாகவும் உலகோரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 2. cstavc:Goa 66vágsfGava (Pietro Vergerio) இவரது காலம் 1349 - 1428 இத்தாலி நாட்டினர். இவர் எழுதிய (De Ingenius Morbis) என்ற கல்விக் கொள்கை விளக்கும் நூலில், உடற்கல்வியின் பெருமையை மிகவும் வலியுறுத்திக் கூறியிருக்கின்றார். உடற்கல்வியானது, தனிப்பட்ட ஒருவரின் மொத்தக் கல்வி ஆற்றலுக்கு மிகவும் தேவைப்படும் ஒன்றாகும். போர்ப் பணிக்கு ஒருவரை உறுதியானவராக உடற்கல்வி தயாராக்கு கிறது. கடினமான சூழ்நிலைக்கு ஆளாக்கி, ஒருவரை உறுதியானவராக்குகிறது. சிறந்த உடல் நலத்திற்கு உடற் கல்வி இன்றியமையாததாகும். மனம் உடலை வளப்படுத்தி, ஓய்வு, உல்லாசத்தினால், மன உணர்வுகளையும் (Spirit) உயர்த்தி வைக்கிறது என்று வற்புறுத்தி எழுதியிருக்கிறார். 3. gocoörd adó Gound, dawarij (Pope pius II) /405 - / 464 இத்தாலிய சிந்தனையாளர் இவர். உடலை நல்ல தோரணையுடன் (Posture) வைத்திருக்க உடற்கல்வி உதவுகிறது என்றார். உடலின் நிமிர்ந்த தோரணை, உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை அளிப்பதுடன், தெளிவாகக் கல்வி கற்கத் துணையாக உதவுகிறது என்பதைக் கொள்கையாக அறிவித்தார். திறமையான பந்து விளையாட்டுக்கள் உடலுக்கும் மனதுக்கும் ஓய்வும் உல்லாசமும் அளிப்பதுடன், கற்றலில்