பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 117 செயல்களே என்பதற்கு உடற்கல்வியே உத்திரவாதம் அளித்து உதவுகிறது, என்பதை மார்டின் லூதர் மேன்மையுடன் தெளிவுபடுத்தினார். - 6. cogagörønačvarð GỢCF6varð (Francois rabelais) /.490-s 553 இவர் ஒரு பிரெஞ்சு நாட்டுக் கல்வியாளர் ஆவார். இவர் ஒரு சிறந்த நூலை எழுதியிருந்தார். அதன் பெயர் (The life of Gargantua) அந்த நூலில் அவர் உடற் கல்வியின் அவசியத்தையும், அதி உன்னத தேவையையும் மிகச் சிறந்த முறையில் வலியுறுத்தி எழுதியிருந்தார். உடற் கல்வியானது பொதுக் கல்வியுடன் இணைந்த முக்கியமான கல்வியாகும். அது மூளை வளத்தை மிகுதிப்படுத்த நல்ல பயிற்சியை அளிக்கிறது. இது போராற்றலை வளர்க்கவும், வீரர்களை உருவாக்கவும் உதவியளிக்கிறது. என்பதே இவர் எழுதிய கொள்கையாகும். 7. Googd gogdö (Roger Asham) /5/5-/568 இவர் இங்கிலாந்தில் கேம் பிரிட்ஜ் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியவர். இவர் (The School Master) என்ற நூலை எழுதியிருக்கிறார். இவர் அந் நூலில் உடற் கல்வியின் மதிப்பையும் மகிமையையும் மிகத் தெளிவாக விளக்கியிருந்தார். வீர விளையாட்டுக்களில் ஈடுபட விரும்புகிற இளைஞர்களுக்கும், போர்ச் செயலில் தீவிரமாக பங்கேற்கிற வீரர்களுக்கும், பொழுதுபோக்குக் காரியங்களில் ஈடுபட்டு, மன அமைதியையும் ஓய்வையும் நாடிச் செல்கிறவர்களுக்கும், உடற்கல்வி மிக முக்கியமான ஒரு கல்வியாக விளங்குகிறது என்று விளக்கியிருக்கிறார்.