பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12O டாக்டர். எஸ். நவராஜ் ೧೦ಖಣಖu உடற்பயிற்சியில் தரமும், தேவையான அளவும் இருக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார். மறுமலர்ச்சியின் மாண்பு மத்திய காலத்தில் உடல்வேறு, உள்ளம்வேறு என்று பிரித்து, உடலை நசிக்க வைத்து, உள்ளத்தை வளர்க்கவும் முயன்று, உடலை இழிவுபடுத்திய கொள்கைகளையும் செயல்முறைகளையும் அறிந்துகொண்டோம் ஆனால் அந்த அநியாயக் கொள்கை, கொஞ்சங் கொஞ்சசமாக அகன்று போனது. - மறுமலர்ச்சி காலத்தில், உடலும் மனமும் ஒன்றுதான் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்கமுடியாது என்ற உண்மைக் கொள்கையை உலகுக்கு உணர்த்தி, மாயக்கொள்கையான மத்தியகாலக்கொள்கையை முறியடித்திருப்பதையும் நாம் அறிந்துகொள்கிறோம். அகமும் குளிர்ந்து போகிறோம். உடற்கல்வி உடல்நலக்காக்க உகந்தது. உடற்கல்வி போர் ஆற்றலை வளர்க்க சிறந்தது. உடலை வலிமையாக்கிட வல்லது தெளிவாகக் கல்வி கற்றிடவழி வகுப்பது. ஒய்வுக்கும் உல்லாசத்திற்கும் உன்னதமானது என்ற கொள்கையே அன்று குன்றேறி நின்றது கோலோச்சி நின்றது. - அறிவாளர்கள் இந்த எழிலான கொள்கையை உலகுக்கு அறிவித்தனர், பொது மக்கள் புரிந்து கொண்டனர். பின்பற்றினர். பெருமை சேர்த்தனர். உடற்கல்வி உரிய இடத்திற்கு ஏற்பட்டது. போற்றப்பட்டது, மெருகேற்றப் பட்டது. மேன்மையாக்கப்பட்டது. உடற்கல்வி சமூகத்தின் ஒழுக்கமான வாழ்க்கைக்கு ஒற்றுமையான வாழ்க்கைக்கு, தருமநெறி செல்லும் தன்மை யான வாழ்க்கைக்கு உதவுகிறது என்னும் உண்மையை, உலகம் ஏற்றுக் கொண்டதைத்தான் மறுமலர்ச்சி காலத்தின் மாண்பு என்று ஏற்று சரித்திரம் புகழ் பாடுகிறது.