பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 123 o miniran minimum r: கருத்துக்கள், பேஸ்டவ் அவர்களுக்கு பேரியக்கம் ஒன்றைத் தொடங்குவதற்கு உற்சாகம் அளித்தன. கி.பி. 1774ம் ஆண்டு. ஜெர்மனியில் உள்ள டேஷா (Dessah) என்னும் நகரில், பிலோந்திரோபினம் (Philonthropinum) 6T solub usireifi @ 6ör sop, GL16mở Lei தொடங்கினார். இதுவே மத்திய ஐரோப்பா பகுதியில் ஏற்படுத்தப்பட்ட முதல் பள்ளியாகும். இதில் சமுதாயத்தின் எல்லாதரப்பினரின் எல்லா குழந்தைகளும் சேர்ந்து பயில வாய்ப்பளிக்கப்பட்டது. இந்தப் பள்ளியை ஆரம்பிக்க உறுதுணையாக இருந்தவர் <916orgmsol- LSlJL (Duke of Anhalt). இந்தப் பள்ளியில், ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டன. தினந்தோறும் 5 மணி நேரம் பொதுக் கல்வியும், 3 மணி நேரம் விளையாட்டுகளுக்கும் என்று ஒதுக்கிய பாடத்திட்டம் வகுக்கப்பட்டது. 3 மணிநேர பொழுதுபோக்கு அம்சமும், விளையாட்டுக் களும் உள்ள பாடத்திட்டத்தில், ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சிகள், ஓடுகளப்போட்டி நிகழ்ச்சிகள், நீச்சல் பயிற்சிகள், கடின உழைப்புள்ள செயல்கள், விளையாட்டுக்கள் எல்லாம் இடம் பெற்றிருந்தன. இவ்வாறாக, ஜெர்மனி நாட்டில் உடற்கல்வி மூலம், உன்னத சமுதாயத்தை நிர்மாணிக்கும் நிறைவான பணியினை பேஸ்டவ் தொடங்கிவைத்தார். பள்ளிகளில் தினந்தோறும் உடற்பயிற்சிகளை போதிக்கும் நோக்கத்தினை, செயல்முறை யினை ஏற்படுத்தி வளர்த்த பெருமையால்தான், இவர் ஜெர்மனி நாட்டின் புதிய உடற்கல்வியின் தந்தை என்று எல்லோராலும் புகழப்பட்டார்.