பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா -o- _ - அரங்க வி ையாட்டுக்களாக இடம் பெற்றிருக்கின்றன என்றும் நாம் கொள்ளலாம்). ஞாயிற்றுக் கிழமை போன்ற விடுமுறை நாட்களில், மாலை நேரங்களில் ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் விளையாட்டுப் போட்டிகளை, தினம் நடத்தி, பங்கு பெற்றவர்களின் பேரார்வத்தை வளர்த்து விட்டார். கார்ல் ஆன்ட்ரோக்குப் பிறகு, ஆசிரியர் பொறுப்பேற்றுக் கொண்டவர் ஜோகன் கிறிஸ்டோபர் பிரடெரிக் கட்ஸ்மத்ஸ் ஆவர். இவரது காலம் 1759 முதல் 1839 ஆகும். --- இவர் இந்தப் பள்ளியில் 50 ஆண்டுகள் பணியாற்றினார். இவர் மேற்கொண்ட சிறப்பான பணிகளைப் பாராட்டும் முகத்தான், ஜெர்மனி, ஜிம்னாஸ்டிக்ஸின் தாத்தா என்று கெளரவமாக அழைக்கப்பட்டார். கட்ஸ்மத்ளல் ஓர் இலக்கியச் சிந்தனையாளர், கணிதம் கற்றவர், (இயல்பியல்) பெளதிகம், கற்ற மொழிவல்லுனர். கால் ஆன்ட்ரோவின் அடியொற்றிப் பாடங்களைக் கற்பிக்கத் தொடங்கிய கட்ஸ், பிறகு புதுப் புது பாடத் திட்டங்களை அதில் புகுத்தத் தொடங்கினார். ஜிம்னாஸ்டிக்ஸ், சாகசச் செயல்கள் (Štunts), கயிறு பிடித்து மேலேறுதல், மல்யுத்தம் போன்றவற்றுடன், தள்ளுதல், சமநிலைப் பயிற்சிகள் (Balance Exercises) முதலியவற்றையும் அறிமுகப்படுத்தினார். மாணவர்களுக்கு சுற்றுப்பயணம், ஒரு நாள் பயணம் போன்றவற்றை ஏற்படுத்தி, அவர்களை சுறுசுறுப்புடன் இயங்க வைத்தார். மாணவர்கள் பெறுகின்ற முன்னேற்றத் தைக் குறித்துப் பாதுகாக்கும் வகையில் குறிப்பேடு (Record) ஒன்றையும் புதிதாக அறிமுகப்படுத்தினார்.