பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 127 உடற் கல்வித்துறை பற்றி கட்ஸ் மத்ஸ் நிறைய புத்தகங்கள் எழுதியிருக்கிறார். அவற்றில் (Gymnastics for the young, Games) என்ற இரண்டு நூல்கள் புகழ்பெற்றவை யாகும். கட்எப்மத்ளலின் கொள்கைகள் 1. உடற் கல்விப் பாடம் எல்லாம் விஞ்ஞானக் கருத்துக்களின் அடிப்படையிலே உருவாக வேண்டும். அதாவது மருத்துவம், உடலியக்க அறிவியல் (Physiology) என்பனவற்றின் அடியொற்றியே உருவாகிட வேண்டும். 2. கல்வியால் பெறுகின்ற அறிவு சிந்தனை போன்ற வாழ்க்கைப் பண்புகள் எல்லாம், விளையாட்டுக்கள் மூலமே விளைந்து வருகின்றன. 3. மக்கள் அனைவருக்கும் சகல வசதிகளும் செய்து தந்து, வலிமையான மக்களாக விளங்கச் செய்யவேண்டும். 4. சிறுவர்களின் இளமைக் காலத்தில்லிருந்தே, உடலை வளர்ச்சி மிக்கதாக, வலிமையுள்ளதாக உருவாக்கிட, கல்வி முறையிலே தீவிரக் கவனம் செலுத்தி, கட்டாயப் படுத்தித் தந்திட வேண்டும். 5. பயிற்சி முறைகள் எல்லாம் எளிதாகவும், இதமானதாகவும் அமைந்த, பயில்பவர்கள் இனிமை உணர்வுடன் பங்கு பெறும் சூழ்நிலையில் அமைந்திட வேண்டும். அப்படிப்பட்ட பயிற்சிகளே உடலை வளர்த்து, உள்ளத்தை செழிக்க வைத்து பூரண மனிதராக (Complete Person) வாழ வகை செய்கின்றன. 6. சிறுமிகளும் பெண்களும், கடினமில்லாத எளிய ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சிகளிலும் விளையாட்டுக்களிலும் பங்கு பெற வேண்டும். i