பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 129 cfø67c feš gycto?cối gagði (Friedrich Ludwig John) இவர் பிறப்பால் ப்ரவியன் (Prussia) என்றாலும், ஜெர்மனி எனது தந்தை நாடு என்று சொல்லிக் கொண்டு சாதனைகள் படைத்து, சரித்திரத்தில் வெற்றி வீரனாக வரலாறு கண்டவர். ஜானின் உடற் கல்விப் புரட்சி, 19ம் நூற்றாண்டின் முற்பகுதியில் தான் முகிழ்த்தெழுந்தது. ஜெர்மனி பிரான்விடம் தோற்றுப்போய் அடிமையானதும் பல சீரிய முயற்சிகளை மேற் கொண்டால்தான், நாடு விடுதலையடையும் என்று எண்ணினார் ஜான். அத்தகைய தேசிய ஒற்றுமையை, மக்களிடையே ஒற்றுமையை எழுப்பக் கூடிய ஆற்றல் உடற் கல்வி மூலமாகத்தான் கிடைக்கும் என்பதை ஜான் உறுதியாக நம்பினார். அதற்காக அவர் மக்களிடையே சொற்பொழிவாற்றியும், நூல்கள் எழுதியும், வீழ்ந்து கிடக்கும் மக்களிடையே விழிப்புணர்ச்சியையும் ஏற்படுத்தினார். அவர் எழுதிய 15ITéò 56ir, “German Naionality, The promotion of Patriotisom in prussia”. ஜெர்மன் பள்ளிகளில் ஒன்றில், ஜான் ஆசிரியராகப் பணியாற்றிவந்தார், பிளாமன் பள்ளி, மற்றும் பெர்லினில் உள்ள ஜெர்மன் குளோஸ்டர் என்ற பள்ளியிலும் பணியாற்றிய போது, அவர் மனதிலே பல புதுமையான திட்டங்களைத் தீட்டிக் கொண்டார். திரட்டிக் கொண்டார். புதன் கிழமை, சனிக் கிழமை, மற்றும் பள்ளிகளின் விடுமுறை நாட்களில், மாணவர்களுக்கு ஒரு நாள் உல்லாசப் பயணம் பிக்னிக் போன்றவற்றை அமைத்துத் தந்து அழைத்துச்