பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13O டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா சென்றார். அங்கே ஒட்டம், தாண்டல், மல்யுத்தம், சிறு விளையாட்டுக்கள் முதலியவற்றைப் போதித்தார். குதித்துத் தாண்டல், இணைக்கம்பப் பயிற்சி சாதனங்கள் (Horizontal Bars) எல்லாம் புதிதாக உருவாக்கப் பட்டன. அத்துடன் துப்பாக்கிச் சுடுதல், கத்திச் சண்டை எல்லாம் கற்பிக்கப்பட்டன. 1811ம் ஆண்டில் இவர் தெளிவான திட்டம் ஒன்றைத் தீட்டி, செயல்படுத்தத் தொடங்கினார். அதாவது தரைப் பயிற்சி நிலையம் (Turnplatz) என்ற ஒரு பெயர் தந்து. ஓரிடத்தில் புதிய பயிற்சி நிலையத்தை அமைத்தார். அதனுள் அவரே உருவாக்கிய உடற்பயிற்சி சாதனங்களை, உயரே ஏறி இறங்கும் ஏணிகள், உயரத் தாண்டும் கம்பங்கள், இணைக் கம்பங்கள், கயிறு, ஏறுதல், சம நிலைக் கம்பங்கள் (Balance Beams) நீளத் தாண்ட உதவும் பள்ளங்கள், கோலூன்றித் தாண்டும் போட்டிகள் போன்றவற்றை உருவாக்கி, அங்கே அமைத்து, அவற்றின் மூலமாக அரிய பயிற்சிகளை அளித்தார். மாணவர்களின் உதவி கொண்ட, இத்தகைய சாதனங்களை அமைத்தது, மக்களிடையே மாபெரும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது. வாரத்திற்கு நான்கு நாட்கள் பயிற்சிகள் அளிக்கப்பட்ட அந்த வகுப்புகளுக்கு, 2200 மாணவர்களுக்கு மேல் வந்து கலந்து கொண்டனர். இதன் அருமையை உணர்ந்த, அருகாமையில் உள்ள பள்ளிகளும், தங்கள் மாணவர்களை அங்கு வந்து சேர்ந்து பயிற்சி பெற அனுமதி வழங்கின. அனுப்பியும் வைத்தன. இந்த ஈடுபாட்டையும் எழுச்சியையும் பயன் படுத்தி, பயிற்சி பெறுகின்ற மாணவர்களுக்கு சீருடை (Uniform) ஒன்றையும் உருவாக்கி அணியச் செய்தார். அதாவது முழுக்