பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 2 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா இந்தப் பயிற்சி இயக்கம் பண்பாட்டு முறையில் வளர வேண்டும். என்பதற்கு ஜெர்மன் ஜிம்னாஸ்டிக்ஸ் (Die Dieut sche Turnkunst) என்ற அரிய புத்தகம் ஒன்றை ஜான் எழுதி நாட்டுக்கு வழங்கினார். தரைப் பயிற்சி நிலையத்தை எப்படி அமைப்பது, பயிற்சிக்கு உதவும் சாதனங்களை எவ்வாறு தயாரிப்பது? அவற்றை எவ்வாறு நிர்வகிப்பது போன்ற வழிமுறைகளை தெளிவாக அதில் எழுதியிருந்தார். சிறுவர்களும் இளைஞர் களும் இப்பயிற்சிகளில் ஒருவித ஈடுபாட்டுடன் சேர்ந்து பயின்றதால், பெரும் மலர்ச்சியே சமுதாயத்தில் பெருகி எழுந்தது, சிறுவர்கள் பயிற்சி செய்த அமைப்புக்கு (Burschenschaften) srsörgD Guuuff. ஜெர்மன் மக்களின் நோக்கமானது, ஒரு சுதந்திரமான அரசாங்கத்தைப்பெறவேண்டும் என்பதே. ஆனால், ஆரம்ப நாட்களில் ஜிம்னாஸ்டிக்ஸ் செய்திட உதவிய பிரபுக்களும் மேட்டுக் குடியினரும், இந்த இயக்கத்தை எதிர்க்க ஆரம்பித்தார்கள், ஜிம்னாஸ்டிக்ஸ் இயக்கத்தைத் தடை செய்யவும் தொடங்கினார்கள். இந்த இயக்கத்தை அழித்திடவேண்டுமானால், அதன் தலைவரைத் தகர்த்துவிட்டால் போதும் என்று சூழ்ச்சி செய்தனர். ஏதோ ஒரு கொலையில் அவர் சம்பந்தப்பட்டதாகக் குற்றம் சாட்டி, 1819ம் ஆண்டு ஜானைக் கைது செய்தனர். 6 ஆண்டுகள் சிறையிலடைத்து, அதன் பின்னர் விடுதலை செய்தனர். என்றாலும், அவர் பெர்லின் நகரில் வசிப்பதற்குத் தடை விதித்தனர். நகரத்திலிருந்து வெளியேறி கிராமப் பகுதியில் இருந்தால், அவரால் ஜிம்னாஸ்டிக்ஸ் இயக்கத்தில் முழுமையாக ஈடுபடமுடியாமல் போயிற்று, அவர் 1840ம் ஆண்டுவரை, போலீஸின் ரகசியக் கண்காணிப்புக் குள்ளாகியிருந்தார். -