பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 133 - - அதன் பின், பிரஷயா மன்னர் நான்காம் பிரெடிரிக் வில்ஹாம் என்பவர், ஜானின் மேன்மையை மதித்து. (Iron ross) என்ற விருதினை அளித்துக் கெளரவித்தார் 1842ம் ஆண்டு முதல், ஜிம்னாஸ்டிக்ஸ் இயக்கம் மீண்டும் செழித்து, புத்துயிர்பெற்று பிரகாசித்தது. ஜானின் கொள்கைகள் விளையாட்டுக்களும்; ஓடுகளப் போட்டிகளும் மக்களிடையே நிலவும் பேதங்கள் சமப்படுத்தி வேற்றுமைகளை சரிப்படுத்தி, சமுதாயத்தை மேம்படுத்தும் சக்திபடைத்தவையாகும். பயிற்சிகள் செய்கிற போது, ஒவ்வொருவரும் அவரவர் சக்திக்கும் திறமைக்கும் ஏற்றதுபோல்தான் பயிற்சிகள் செய்யமுடியும் என்பதால், அவர்களை மதித்துப்போற்ற வேண்டுமே தவிர, மாறாக அவதூறாகப் பேசக்கூடாது. ஒருநாட்டை உயிரோட்டமுள்ளதாக, வலிமையுள்ளதாக மாற்ற உடற் கல்வியால் மட்டுமே முடியும் என்று ஜான் உறுதியாக நம்பினார். உத்திரவாதத்துடன் எழுதினார். உற்சாகமாகத் தன் வாழ்நாளை இதே கொள்கையுடன் வாழ்ந்து காட்டினார். ஒவ்வொரு நகரமும் தரைப் பயிற்சி நிலையங்கள், உள்ளாடும் பயிற்சி அரங்கங்கள் அமைத்திடவேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் இப்பயிற்சி அரங்கங்கள் அமைய வேண்டும் என்ற கொள்கையை வற்புறுத்தி எழுதினார். நடைமுறைக்கும் கொண்டு வந்தார். இவ்வாறு நாட்டினரின் நல்வாழ்க்கையை அமைத்திடப் பெருந்தொண்டாற்றினார் லூட்விக் ஜான். - <9/c_argůch 6můcstvarů (Adolf Spiess) அடால்ப் ஸ்பீயஸ் என்பவர் ஹெசி என்னும் பெரு நகரைச் சேர்ந்தவர். இவர் மாணவராக இருந்தபோதே