பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 6. பள்ளிகளில் உள்ள மற்ற பாடங்களுக்குள்ள மதிப்பும், மரியாதையும், ஜிம்னாஸ்டிக்குக்கும் தரப்படல் வேண்டும். 7. ஆண்டுக்கு ஒரு முறை ஜிம்னாஸ் டிக்ஸ் பயிற்சி கண்காட்சியை நடத்துதல் வேண்டும். உடற்கல்வியின் பெருமையை அடால்ப் சிறப்பாகவே அறிந்திருந்தார். ஓய்வும் உல்லாசமும் மட்டும் தராமல், ஒழுக்கம், கட்டுப்பாடு, நிமிர்ந்த உடல் தோரணை (Posture) முதலியவற்றை நல்குகின்ற நல்லதொரு கல்வியே உடற்கல்வி என்ற இவரது கொள்கையானது, அவர் காலத்தில் அந்தப் பகுதியில் மட்டும் ஏற்றுக் கொண்டதோடு, உலகம் முழுவதும் பரவிச் செல்கின்ற பெருமையும் பெற்றது தான் அவரது கொள்கையின் சிறப்பம்சமாகும். 19-ம் நூற்றாண்டின் மத்திய காலத்தில் அடால்ப் எல்பீயசின் முயற்சிகள் நாடு முழுவதும் வெற்றிகரமாக நிறைவேறின. அதன் பயனாக உடற்கல்வியும் பள்ளிகளில் உள்ள பாடங்களில் ஒன்றாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த அமைப்பை வெற்றிகரமாக செயல்படுத்தும் வகையில் 1851ம் ஆண்டு, பெர்லின் நகரில், ராயல் சென்ட்ரல் இன்ஸ்ட்யூட் ஆப் ஜிம்னாஸ்டிக்ஸ் என்ற அமைப்பு ஒன்று நிறுவப்பட்டது. அதன் இயக்குநராக வான் ரோத்ஸ்டின் என்பவர் பொறுப்பேற்றார். இதன் பணி இரண்டு இணையான பாடத்திட்டப் பயிற்சி களாகப் பரிமளித்தன. ஒன்று இராணுவ அதிகாரிகளுக்குப் பயிற்சியளித்தல். இரண்டு - ஆசிரியர்களுக்குப் பயிற்சியளித்தல் என்பதாக வான்ரோதஸ்டின் தமது பணியைத் தொடங்கினார்.