பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 139 அடால்ப் இட்லர் ஆட்சியில் நாசிக் கட்சியினர் ஜெர்மனியின் ஆட்சியைக் கைப்பற்றிய உடன், தங்கள் அரசியல் பலம் தொடர்ந்து பெருகவும், ஆட்சியானது பத்திரமாக நிலைத்திருக்கவும், உடற் கல்வியைத் தங்களுக்கு சாதகமான கருவியாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். - இட்லர் தனது ஆட்சியில், கல்வி முறைகள் அத்தனையிலும் பெருமாற்றம் செய்து, தமக்கு சாதகமாக்கிக் கொண்டார். அதாவது தனது நாசித் தத்துவம் (Nazi Philosophy) நாடெங்கும் வேரூன்ற பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டார். 1933ம் ஆண்டு, ஒரு இராணுவ அதிகாரி, விளையாட்டு softlämäume, (Sports Commission) GlåuéouQuorsp. Leof. அமர்த்தப்பட்டார். அவர் நாட்டில் உள்ள 16க்கும் மேற்பட்ட விளையாட்டுக் கழகங்கள், ஆசிரியர், இளைஞர், மருத்துவக் கழகங்கள் எல்லாவற்றையும், தமது கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வந்து, தேசியக் கழகம் என்ற பெயரில் ஒரு தலைமைக் கழகத்தை அமைத்து, அனைத்து கழகத்திலிருந்தும் ஒவ்வொரு நபர் பிரதிநிதியாக அதற்கு வரவேண்டும் என்றும் விதி அமைத்து, மாற்றியமைத்தார். மாநில, மாவட்ட, மற்றும் கிராமத்தில் உள்ள விளையாட்டுக் கழகங்கள் எல்லாம், தேசியக் கழகம் தருகின்ற கொள்கைப்படியும் நெறிமுறைப் படியுமே நடந்தாக வேண்டும் என்ற கட்டளையையும் பிறப்பித்தார். பதினாறு விளையாட்டுக் கழக அமைப்புகளில் சேராத மற்ற இளைஞர்களுக்கு, உடற் கல்வியை அளிக்கும் பொறுப்பினை, உன்னதமாக செயல்படுத்தித் தந்திட கிராப்ட் டர்ச் ப்ரூடே எனும் கழகம் ஏற்றுக் கொண்டது. இது பொழுது