பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா தனியார் நிறுவனங்களும், பொதுத்துறை நிறுவனங் களும் தங்கள் தொழிலாளர்களுக்கு உடற்பயிற்சித் தருவதிலும், விளையாட்டுக்களில் ஈடுபடுத்துவதிலும், பெரும்பங்கு வகிக்கின்றன. - ஜிம்னாஸ் டிக் பயிற்சிகள் முதன்மை இடத்தைப் பெற்றிருக்கின்றன, அதற்கடுத்ததாக கால்பந்தாட்டமும், ஒடுகளப் போட்டிகளும் சிறப்பான இடங்களை வகிக்கின்றன. ஆண்டுதோறும் விளையாட்டு விழாக்கள் திருவிழா போலவே விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. சிறுவர் முதல் முதியோர் வரை, ஏதாவது ஒரு விளையாட்டைக் கற்றுக் கொண்டு விளையாடி மகிழ்கின்றனர். உடல் வலிமையை விரும்பி வளர்க்கும் இந்த நாடு, உலக அளவில் வலிமைமிக்கப் போட்டியாளர்களை உடைய நாடாகத் திகழ்கிறது. மேற்கு ஜெர்மனி உலகில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறும் நாடுகளில், முக்கிய நாடுகளில் ஒன்றாக இது திகழ்கிறது. உடற்கல்வி, பொதுப் பாடத்திட்டத்தில் ஓர் அங்கமாக இருந்தாலும், விளையாட்டுக்கள் (Sports) கட்டாயட் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன. நீச்சல் குளங்கள் பெரும்பான்மையான பள்ளிகளுக்கு உண்டு. மாநிலங்கள் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பள்ளி மாணவ மாணவியர்க்கு ஆடுகளங்கள் போன்றவற்றை அமைத்துத் தருகின்ற பொறுப்பேற்றிருக்கின்றன. நீச்சல்தான் அங்கே அனைவரும் விரும்பும் விளையாட்டாக இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் இளைஞர்கள் விளையாட்டு போட்டிகள் என்ற ஓர் அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, போட்டிக