பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா _க_ (6. ੋ நாட்டில் အႏွက္ပြဲမြံ]] - 19ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில், ஸ்வீடன் நாட்டு உடற்கல்வி முறைகள், ஜெர்மனி, டென்மார்க்கு நாடுகளைப் போலவே, இராணுவரீதியில் தான் அமைந்திருந்தன. நாட்டு மக்களை வலிமையுடையவர்களாக மாற்றி, நாட்டைக் காக்கும் பணியில் ஈடுபடுத்துவதே முக்கிய நோக்கமாக இருந்தது. நாட்டின் நிலையும் அப்போது பல எதிரி நாடுகளால் தாக்கப்படும் சூழ்நிலையில்தான் இருந்தது. - போர் நடைபெறும் சூழ்நிலையானது அகன்று, பேரமைதி ஏற்படும் நிலை வந்த பிறகு, மக்களின் நல்வாழ்வுக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் உதவுகின்ற வகையிலே, உடற் கல்வியை உபயோகப்படுத்திக் கொண்டனர். ஸ்வீடன் நாட்டிலே உடற்கல்வித்துறை பெரும் வளர்ச்சி அடைவதற்குத் தலையாய காரணமாக இருந்தவர்களில் நான்கு பேர்களைப் பற்றி இங்கே அறிந்து கொள்வோம். /. 67ddff6?opgötófá gómi (Per Henrik Ling) இவரது காலம் 1776 முதல் 1839 ஆகும். லிங் ஏற்படுத்திய மறுமலர்ச்சியோ ஏடு காணாத பெருமையுடைய தாகும். லிங் பிறந்த ஆண்டு 1776 ஆகும். இவர் டென்மார்க்கு நாட்டிலே தன் மாணவப் பருவத்தைக் கழித்தார். டேனிஷ் மொழி, ஜெர்மன் இலக்கியம் பிரெஞ்சு மொழி ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தார். -