பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 147 ஸ்வீடன் நாட்டை பிரான்சும் ரஷயாவும் தாக்கி, முக்கியமான பகுதிகளையெல்லாம் வென்று கைக் கொண்டன. அடிமை நாட்டில்தானே ஆரவாரப்புரட்சி எழும்! ஜெர்மனி நாட்டிலே ஜானும், டென்மார்க்கு நாட்டிலே பிரான்ஸ் நாச்டிகாலும் செய்த வலிய புரட்சிபோல, ஹென்ரிக் லிங்கும் ஸ்வீடன் நாட்டினைப் பலமான புனரமைப்பினைச் செய்கிற வாய்ப்பினைப் பெற்றார். நாட்டின் இழந்த பெருமையையும், ஆட்கொள்ளப்பட்ட பிரதேசங்களையும் மீட்டிட மக்களைத் தயார் செய்திட வேண்டுமானால், அதற்கு உடற்கல்வியே உதவும் என்ற உண்மையை, தனது நாட்டுத் தலைவர்களுக்கு உணர்த்தினார். ராயல் சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் ஜிம்னாஸ்டிக்ஸ் என்ற நிறுவனம் 1814ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஹென்ரிக்லிங் அதன் இயக்குனராக நியமிக்கப்பட்டார். லிங் ஜிம்னாஸ்டிக்ஸ் பற்றி பல நூல்களை எழுதினார். அவர் இந்த ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சி முறைகளை நான்கு வகையாகப் பிரித்து அதன்படி பயிற்சிகளை அளித்தார். /. அறிவு பூர்வமான உடல் வளர்ச்சிப் ow??&ch:(Educational Gymnastics) ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சிகள் மூலம் குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியை அளிப்பது. உடலில் தோன்றும் சிறு சிறு குறைகளை நிவர்த்தி செய்வதுடன்; தோன்றும் நோய்களையும் நீக்குவது. அத்துடன், சிறுவர்களுக்கு ஒழுக்கத்தையும். உடல் தோரணையையும் தந்து, சீரிய வளர்ச்சியளிக்கும் ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சி முறைகள்.