பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 2. இராணுவ ஜிம்னாஎப்டிக்ளப் பயிற்சிகள் (Military Gymnastics) - இராணுவ ரீதியான பயிற்சிகள் உடலை வலிமைப் படுத்தவும், கடினப்படுத்தவும் உதவின. அதனால் வீரத்தை வளர்க்கவும், போராயுதங்கள் எடுத்து பொருத்தவும் போராடவும், நாட்டினைக் காக்கவும் ஊக்கமூட்டிய பயிற்சிகளாக இவை அமைந்தன. 3. நலமாக்கும் பயிற்சிகள் (Medical Gymnastics) உடலில் தோன்றும் நோய்களைத் தீர்ப்பது, குறைகளைக் களைவது; அதற்காக 3 வகையான உடற்பயிற்சி முறைகளை உருவாக்கியிருந்தார் லிங், 1. நோயாளியே தானே பயிற்சிகள் செய்து, நிவாரணம் பெறுவது. (Active). 3. நோயாளியால் பயிற்சிகள் செய்ய இயலாதபோது, அவருக்கு உதவியாள் ஒருவர் உடலை இயக்கிச் செய்யும் பயிற்சிகள். (Passive): 3. இரண்டுமே முடியாத போது, நோயுற்றவரோ அல்லது அவருக்கு உதவுபவரோ, எதிர்ப்புச்சக்தி (Resistance) மூலம் பயிற்சியைத் தொடர்வது. - 4. உடலழகுப் பயிற்சிகள்: (Aesthetic Gymnastics) உடலுக்கு அழகையும், நளினத்தையும், இயங்கும்போது கவர்ச்சியான அசைவுகளையும் கொடுக்கின்ற பயிற்சிகள் என்றும் இவை அமைக்கப்பட்டிருந்தன. ஹென்ரிக் லிங் தனது உடற்பயிற்சிகளை இரண்டு வகையாகவும் பிரித்துக் கொடுத்திருந்தார். 6 (9465ےhل பின்வருமாறு.