பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உலக நாடுகளில் உடற்கல்வி

13



தொடுத்து, அவற்றைத் தமது ஆட்சியின் கீழும் அதிகாரத்தின் கீழும் கொண்டு வந்தனர்.

ஒன்றை மட்டும் இங்கே நாம் கட்டாயம் குறிப்பிட்டாக வேண்டும். ஸ்பார்ட்டா மக்கள் அனைவரும், தொட்டில் முதல் சுடுகாடு செல்லும்வரை வீட்டை மறந்து, நாட்டுக்காகவே உழைத்து வந்தனர்.

ஸ்பார்ட்டா நாட்டு உடற்கல்வியானது, இராணுவ சேவையை முழுமைப்படுத்தும் ஒரு கல்வியாகவே உதவி வந்தது.

ஸ்பார்ட்டா மக்களின் வாழ்க்கை முறையையும் நெறியையும் சிறிதளவு அறிந்து கொண்டால், அந்த நாட்டிலிருந்த இராணுவ ஆட்சியின் இராட்சசத் தன்மை தெளிவாகவேப் புலப்படும்.

குழந்தையும் தேர்வும்

ஒரு பெற்றோருக்குக் குழந்தை பிறந்திருக்கிறது என்ற செய்தி கேட்டதும், உடனே வருபவர்கள் உறவினர்கள் அல்ல. அந்நாட்டு அதிகரிகள் தான்.

அந்தக் குழந்தை நோயுடனோ, அல்லது, பலஹீனத்துடனோ அல்லது ஊனமுற்றோ பிறந்திருந்தால், உடனே அக்குழந்தை தாய்கெட்டஸ் (Taygetus) என்ற மலைச் சிகரத்திற்கு அனுப்பிவைக்கப்படும். அக்குழந்தை அநாதையாக அங்கே விடப்படும். அது கொஞ்சங் கொஞ்சமாக வெயிலிலும் மழையிலும் வாடி வதங்கி, அழுதழுதுச் சாகும். அதாவது இயற்கையான கொடுமையிலே அந்த நாட்டுக்கு உதவாத குழந்தை செத்துமடியும். வலிமையாக உள்ள குழந்தைகளே, வாழ்வதற்கு அதிகாரிகளால் வரவேற்கப்படும். அனுமதிக்கப்படும்.

குழந்தையும் தேர்வும்