பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா மாணவ மாணவியர் வயதுக்கேற்ப செய்திடும் பயிற்சி முறைகள் வகுத்துத் தரப்பட்டன. முன்னேற்றத் கொள்கை யிலே தான் அப்பயிற்சிகள் உருவாக்கப்பட்டிருந்தன. - இவர் 2000 பயிற்சிகளை (பேனாவால்) வரைப்பட மாக்கித் தந்தார். ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சிகளில் நிற்கும் முறைகள், செய்யும் முறைகள் எல்லாவற்றையும் படம் வரைந்து காட்டியதானது, கிஜார்மல் திட்டமிட்டு நன்கு வளர்த்தத் தேர்ச்சியைக் காட்டுகிறது. வயதுக்கேற்பவும், உடல் வளர்ச்சிக் கேற்பவும் திறமைக்கேற்பவும் ஜிம்னாஸ் டிக்ஸ் பயிற்சிகள் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும் இன்றைய ஸ்வீடன் பயிற்சி முறைகள். இவர் வழங்கிய நல்ல ஒழுங்கு முறைப்பயிற்சிகளாகும். இதில் குறிப்பிடத்தக்கப் பெருமை என்ன வென்றால், கால் முதல் தலைவரை உள்ள உடலுறுப்புக்களுக்குத் தனித் தனியே அமைத்துத் தந்திருக்கும் பயிற்சிகள் தாம். ஹென்ரிக் லிங், அவரது மகன் கிஜால்மர் லிங், அவரது மகள்கள் ஹில்டர், வெண்லாயாவரும் அந்த நிறுவனத்தில் சேர்ந்து, உண்மையாக உழைத்து, நாட்டின் பெருமையை வளர்த்த செழுமையை ஸ்வீடன் நாட்டு வரலாறு பெருமையாகப் புகழ்ந்துரைக்கிறது. எல்விடனில் உடற்கல்வி ஸ்வீடன் உடற்கல்வியை பள்ளிகளில் உடற்கல்வி; பொது மக்களிடையே உடற் கல்வி என்று இரண்டு வகையாகப் பிரித்துப் பார்க்கலாம். - பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் உடற்கல்வி உண்டென்றாலும், பள்ளிகளில் கட்டாயப் பாடமாகவும், கல்லூரிகளில் விருப்பப் பாடமாகவும் வைக்கப்பட்டுள்ளது. . خ+