பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 153 7 வயது முதல் 9 வரையுள்ள குழந்தைகளுக்கு வாரம் முக்கால் மணி நேர பாடமும், 9 முதல் 14 வயதுள்ள குழந்தைகளுக்கு வாரம் 3 மணி நேர அளவும் வகுப்புகள் வைத்து, பாடம் நடத்துகின்றனர். உயர்நிலை வகுப்பு மாணவ மாணவியர்க்கு வாரத்திற்கு 3 முதல் 4 மணி நேரம் உண்டு. வயதுவந்த பள்ளி மாணவ மாணவியர்க்கு வருடத்திற்கு 12 நாட்கள் வரை, வெளியிடங்களுக்குச் சென்று பயிற்சி பெறவும் வாய்ப்புள்ளன. ஆரம்பப்பள்ளி மாணவர்க்கு வகுப்பு ஆசிரியர்களே உடற்கல்விப் பாடங்களை நடத்துகின்றனர். உயர் நிலைப் பள்ளி அளவில், ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு (ஜிம்னேவியம்) உள் பயிற்சி அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டு, அதனுள்ளே தாண்டும் சாதனங்கள், (Modern Horse) S6T6TÄ5 Sm 6öor Gub GluLuq (Vaulting box) தாண்டும் கம்பம், நடைக் கம்பம் சுவற்றில் பொருத்தப்பட்ட சாதனங்கள், ஜிம்னாஸ் டிக்ஸ் பலகைகள் ஏற உதவும் கயிறுகள், தரையில் விரிக்கும் பாய்கள், மெத்தைகள் போன்ற பயிற்சி சாதனங்களை வைத்துப் பராமரிக்கும் வகையில் அமைந்திருந்தன. வெளியிடங்களில் செய்யும் பயிற்சிகள் எல்லோராலும் விரும்பப்பட்டன என்றாலும், சூழ் நிலை தட்பவெப்ப நிலை சரியில்லாத காரணத்தால், உள் பயிற்சி அரங்கத்தில் பயிற்சி செய்திடும் பணியைத் தொடர்ந்தனர். ஸ்வீடன் நாட்டில், குளிர் கால விளையாட்டுக்கள் மக்கள் மத்தியிலே சிறப்பான வரவேற்பைப் பெற்றிருந்தன. நீச்சல் எல்லோரிடையே புகழ் பெற்ற விளையாட்டாக இருந்தது. 1830ம் ஆண்டு பள்ளியில், மாணவர்கள் உடல் நலம் பற்றி சோதனை செய்யும் முறை, முதன் முதல் அறிமுகப் படுத்தப்பட்டது. 1868ல் உடல் நல அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டனர். மருத்துவர்களும் தாதிகளும் பள்ளிக்கு