பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா பல்கலைக் கழகத்தில் தத்துவப்பாடம் பயின்ற பிரான்ஸ், உடற் கல்வியாளராக மாறியதற்குக் காரணம், ஜெர்மன் நாட்டின் ஜிம்னாஸ் டிக் பேராசிரியர் கட்ஸ் மத்ஸின் கொள்கையில் ஏற்பட்ட பிடிப்பும் முனைப்பும் தான். இவர் 1799ம் ஆண்டு கோபன்கேகன் என்னும் இடத்தில் தனியாக ஒருஜிம்னேஷியத்தைத் தொடங்கினார். இந்த மாதிரி ஜிம்னேஷியம் ஐரோப்பாக் கண்டத்திலேயே முதலாவதாகத் தொடங்கியது என்ற பெருமையைப் பெற்றது. வலிமையான மக்களை நாட்டிலே உருவாக்க வேண்டும். அதையும் உடற் கல்வி மூலமாகச் செய்ய வேண்டும் என்ற இவரது ஆசையும் கொள்கையும், நெப்போலியன் டென்மார்க்கு, நாட்டின் மீது நடத்திய போர்களால் மாற்றம் பெற்றன. 1804ம் ஆண்டு, டென்மார்க்கு அரசாங்கம் இவரை இராணுவ ஜிம்னாஸ்டிக்ஸ் கல்லூரிக்கு (Military Gymnastics Institute) இயக்குனராக ஆக்கியது. இவர் கடற்படை வீரர்களுக்கும், தரைப்படை வீரர்களுக்கும் முதலில் ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சிகளை அளிக்க முற்பட்டார். 1808ம் ஆண்டு, நாட்டு மக்களுக்கும் நல்லதொரு பயிற்சி அளிக்க வேண்டும் என்று இவர் அரசினைக் கேட்டுக் கொண்டார். அரசும் அங்கீகாரம் அளிக்கவே, பள்ளியில் பயிற்சிகள் தரவும், பயிற்சிக் கல்லூரிகளில் பயிற்சிகள் தரவும் வல்லமை வாய்ந்த உடற்கல்வி ஆசிரியர்களை உருவாக்கி விட்டார். 1809ம் ஆண்டு, பள்ளிகளில் முடிந்த வரை ஜிம்னாஸ்டிக்ஸ் வகுப்புகளை நடத்துமாறு கேட்டுக் கொள்ளும் ஆணையைப் பிறப்பித்தார்.