பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



தகுதியான தேகத்தினைப் பெற்ற காரணத்தால் தப்பிவிட்ட ஒரு குழந்தை, எப்படியெல்லாம் வளர்கிறது என்பதை நாம் 5 பிரிவுகளாகப் பிரித்து அறிந்து கொள்ளலாம்.

விட்டில் வளரும் குழந்தை

ஒரு குழந்தை 7 வயது ஆகும் வரை, அதன் தாயிடம் வளரஅனுமதி உண்டு. அந்தத் தாய்க்கு அன்புத் தாயாக இருந்து அந்தக் குழந்தையை வளர்க்கும் வாய்ப்பில்லை. ஒருநாட்டின் தாதி ஒருத்தி, ஒரு குழந்தையை வளர்க்கும் பாங்கிலே தான் வளர்க்க வேண்டும்.

அன்னையின் அன்பைக் காட்டிலும், அந்தக் குழந்தைக்கு நாட்டுப்பற்றையும், நாட்டைப்பற்றியும் தான் அந்தத் தாய் ஊட்டியாக வேண்டும்.

அந்தத் தாய், தங்களது நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற சேவை மனப்பான்மையுடன் தான் அந்தச் சிசுவை வளர்க்க வேண்டும். அதற்காக அந்தத்தாய் தன் குழந்தைக்குத் தளராத கடமையை, கட்டுப் பாட்டையே ஊட்டி வளர்த்தாக வேண்டும். ஆக, தன்னைவிட, தன் தாய் நாடு தான் முக்கியமானது, முதன்மையானது என்ற குறிக்கோளுடன், ஒவ்வொரு தாயும் தன் குழந்தையை 7 வயது வரை வளர்க்கிறாள். பிறகு?

மாணவப் பருவம்

ஏழு வயது ஆனவுடன், அந்தக் குழந்தை அரசாங்கத்தின் ஓர் அங்கமாக ஆகிவிடுகிறது. ஏழு வயது பாலகன், அரசு அதிகாரிகளால், எடுத்துச் செல்லப்பட்டு, அகோகி (Agoge) என்ற பொதுப் பள்ளித் துறைக்குள் புகுத்தப்படுகிறான்.

அகோகி என்றால், பொதுவான இராணுவப் பயிற்சிமுறை என்பதாகும். இந்த இராணுவப் பயிற்சி முறை, 18 வயது வரை தொடர்ந்து தரப்படும்.