பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16O டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா முதல் நூலாகவும், முதன் முதலாக அரசு செலவில் வெளியான நூலாகவும் பெருமை பெற்றுக் கொண்டது. 1834ம் ஆண்டு, உயர் நிலைப் பள்ளிகளுக்கு வழிகாட்டுகின்ற ஜிம்னாஸ்டிக்ஸ் நூலையும் இவர் எழுதிப் பதிப்பித்தார். - பெண்களுக்கான பயிற்சிகள் என்று இவர் சோதனை செய்து பார்த்து, பெண்களுக்குப் பெரிதும் பயிற்சிகள் உதவுகின்றன என்று கண்டறிந்து, பெண்களையும் உடற்கல்வி ஆசிரியைகளாகப் பயிற்சி தந்து, மேன்மைப் படுத்தினார். டென்மார்க் பல முயற்சிகளில் வெற்றி பெற்று ஐரோப்பியா கண்டத்திலேயே உடற்கல்வியை வளர்த்த முதல் நிலை நாடு என்று உயர்ந்து நின்றது. அம்முறைகள் பின்வருமாறு. 1. பள்ளிப் பாடத்திட்டத்தில், உடற்கல்வியை ஒன்றாக இணைத்தது. 2. உடற்கல்வி ஆசிரியர்கள் என்று நன்கு பயிற்சியளித்து உருவாக்கியது. 3. அரசு செலவிலேயே ஜிம்னாஸ் டிக்ஸ் வழிகாட்டி நூலை அச்சிட்டது. 4. எல்லா பள்ளிகளுக்கும் வழிகாட்டி நூலை வழங்கி, பயிற்சி முறைகளை பிரபலமாக்கி வெற்றி கண்டது. இவற்றை முன்னின்று நடத்தி வழிகாட்டிய பெருமை பிரான்ஸ் நாச்டிசெல் அவர்களையே சாரும். Gø.67. g5/7CC67ø6ör (K.A. Nudsen) 1847ம் ஆண்டு, பிரான்ஸ் நாச்டிகெல் காலமான பிறகு, கேப்டன் நீல்ஸ் ஜார்ஜலாகர் என்பவர் இயக்குநர் பொறுப்பை