பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 161 ஏற்றார். இவர் இராணுவத்தில் இருந்ததால், இவரது 23 ஆண்டுகாலப் பொறுப்பில், இராணுவத்தில் பயிற்சி பெற்ற இராணுவ ஆசிரியர்களே, பள்ளிகளில் ஜிம்னாஸ் டிக்ஸ் போதிக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தனர். கேப்டன் நீல்ஸ் பதவியில் ஓய்வு பெற்ற பிறகு, அந்த இயக்குநர் பதவியும் ரத்து செய்யப்பட்டது. அதற்குப்பதிலாக, goibéarmsmülhésm) soul suffs, sit (Inspector of Gymnastics) என்னும் புதிய பதவிகளை ஏற்படுத்தியது. அந்தப் பதவிகளும் இராணுவத்தில் பணியாற்றியவர் களிடமிருந்தே நிரப்பப் பட்டன. அதனால், பள்ளிகளில் பயிற்றுவிக்கப்பட்ட ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சிகள், இராணுவடிவமே பெற்றிருந்தன. இதற்கு மாறாக, இன்ஸ்பெக்டர் பதவிக்கு, இராணுவத்தில் அல்லாத ஒருவர் அமர்த்தப்பட்டார். அவர்தான் K.A. நூட்சென். இவர் 30 ஆண்டுகள் இந்தப் பணியில் இருந்தார். இவருக்கு ஸ்வீடன் நாட்டு ஜிம்னாஸ்டிக்ஸ் முறைகளில் அதிக விருப்பமும் ஈடுபாடும் இருந்ததால், அந்த முறைகளே அதிகமாகப் பின்பற்றப்பட்டன. இவர் ஜிம்னாஸ்டிக்ஸ் பாடப் புத்தகம் (Text Book of Gymnastics) என்ற புத்தகம் ஒன்றை எழுதினார். ஜிம்னாஸ் டிக்ஸ் பயிற்சிகள் உடலில் வலிமையை ஏற்படுத்தவும். உடல் அமைப்பையும் அழகையும் உண்டாக் கவும், உடல் உறுப்புக்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக வலுவேற்றவும் பயன்பட வேண்டும் என்பதே இவரது கொள்கையாக இருந்தது. இவரின் சிறந்த சாதனையானது, ஸ்வீடனில் உள்ள ஸ்டாக்ஹோம் நகரில், லிங் விளையாட்டு விழா நடைபெற்ற போது, 60 வயதுக்கு மேற்பட்ட 100 முதிய