பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா பயிற்சியாளர்களைக் கொண்டு சென்று, காட்சிப் பயிற்சிகள் செய்து காட்டி, உலக மக்களின் பாராட்டைப் பெற்றது தான். அப்பொழுது நூட்செனுக்கு வயது 75. உடற்கல்விப் பாடம் 1909ம் ஆண்டு, பல்கலைக்கழக மாணவர்களுக்கு உடற்கல்வியும் பாடத் திட்டத்தில் ஒன்றாக இணைக்கப் பட்டது. அவர்கள் அதில் பயிற்சிப் பெற்றால், உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்குக் கற்பிக்கின்ற தகுதியைப் பெறுவார்கள். அதற்காக, மாநில ஜின்மாஸ்டிக்ஸ் பயிற்சி நிலையம் ஒன்றும் அமைக்கப்பட்டு, ஆசிரியர் பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. 1911ல் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பயிற்சி நிலையம், உடற்கல்விப் பயிற்சிக் கல்லூரி (Physical Training Teachers College) srebrni Quur torppiò Qubpg. Gu074%fæ0/f U. 65%örc_arfG (J. Lindhard) கோபன் கேஹன பல்கலைக்கழகத்தில், உடற்கல்வியை பாடங்களில் ஒன்றாக வைக்கப்பட்டபொழுது, இவர் அதனைக் கண்காணித்து வழிநடத்துகிற பொறுப்பினை ஏற்றுக் கொண்டார். இவர் உடற்கூறு, உடல் இயக்கம் மற்றும்; ஜிம்னாஸ்டிக்ஸ், தத்துவம் என்னும் துறையின் தலைவராகப் பொறுப்பேற்றார். - இவர் எழுதிய ஜிம்னாஸ்டிக்ஸ் தத்துவம் (The Theory of Gymnastics) என்ற புத்தகம், பள்ளிகளுக்கு சிறந்த வழிகாட்டும் புத்தகமாக அமைந்தது. 1935 வரை பல்கலைக் கழகப் பேராசியராகப் பணியாற்றிய லிண்டார்டு, உடற்கல்வி ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில், ரெக்டார் (Rector) எனும் பொறுப்பினை ஏற்றுத் தன் பணியினைத் தொடர்ந்தார்.