பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 163 இவரது உடற்கல்வி சேவையானது, உடற் கல்வித் துறையை விஞ்ஞான பூர்வமாக அமைத்து வளர்த்தது தான். துப்பாக்கிப் பயிற்சி சங்கம்: (The Rife club) டென்மார்க் நாட்டின் ஒருபகுதி, ஜெர்மனி நாட்டாரால் ஆக்கிரமிக்கப்பட்டபொழுது, நாட்டின் இராணுவ வலிமையை மேலும் பொதுமக்களால் வலுப்படுத்த விழைந்து, கேப்டன் மான்ஸ்டர் என்பவரால் துப்பாக்கிப் பயிற்சி சங்கம் என்ற ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. 1864ல் தொடங்கிய இந்த சங்கத்திற்கு, பொதுமக்களின் ஆதரவு நிறைய கிடைத்தது. இத்துடன்; உடல் வளர்ச்சி பெறுவதற்காக, ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சிகளும் எங்கணும் அறிமுகப்படுத்தப்பட்டன. இராணுவத்தில் பயிற்சிபெற்ற அதிகாரிகளை, இதிலும் பொறுப்பேற்றிருந்தார். இன்றும் நாடு முழுவதும் இந்த சங்கம் இணையிலா சேவை புரிந்து வருகிறது. பள்ளிகளில் மரபு முறைகள்: உத்தியோகத்திற்காகப் படித்துப் பணிபுரிகிற பொது மக்களில் பலர், நலிந்த தேகத்திற்கும், வளைந்த தோற்றத்திற்கும், ஆளாகின்றனர். அதனால் இளமையிலேயே அதாவது 18 முதல் 25 வயதுள்ள இளைஞர்கள். உடற்கல்வியுடன், ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சி முறைகளையும், அந்த நாட்டு மரபுகெடாமல் செய்தால், நல்ல பயன் கொடுக்கும் என்ற நோக்கத்துடன் நிறுவப்பட்ட பள்ளிகள் பல டென்மார்க்கில் தோன்றின. கிராமப்புற இளைஞர்களுக்கு பல புதிய பயிற்சிகளை வடிவமைத்துதந்தார் (Neils Bukh) என்பவர். இவர் ஒரு மாதிரி பள்ளியையே ஒட்டரப் எனும் இடத்தில் நிறுவினார்.