பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உலக நாடுகளில் உடற்கல்வி

15


பொதுத் தங்குமிடத்திற்குக் கொண்டு செல்லப்படுகிற மாணவர்கள், அவரவர் வயதுக்கேற்ப ஒன்று திரட்டப்படுகின்றார்கள். அவர்களை ஒரு கம்பெனியாக உருவாக்குகிறார்கள். ஒரு கம்பெனிக்கு 64 மாணவர்கள் இருப்பார்கள்.

இந்தக் கம்பெனிகள் நான்கு சேர்ந்து ஒன்றாகும் போது ட்ரூப் (Troop) என்று அழைக்கப்படும். இந்த ட்ரூப்புக்கு ஒரு தலைவனாக, 20 வயது நிரம்பிய இளைஞனே இருப்பான்.

இப்படி பல துருப்புக்கள் ஒரு மாநில இராணுவ அதிகாரியின் கீழ் செயல்படும். அந்த மாநில அதிகாரி பெய்டோனமஸ் (Paidonomous) என்று அழைக்கப்படுவார்.

இவ்வாறு பொறுப்பேற்றுப் பணியாற்றும் அதிகாரிகள் யாருக்கும் சம்பளம் தரப்படுவதில்லை. ஏனென்றால், முதிர்ச்சியும் ஆண்மையும் பெற்ற ஒவ்வொரு மனிதனும், தங்களுக்குரிய கடமையை தாய் நாட்டுக்கே அர்ப்பணித்திட வேண்டும். இது தானே அரச கட்டளை! பிறகு எப்படி சம்பளம் கிடைக்கும்?

                 மாணவர்களும் இன்னல்களும்

ஒவ்வொரு கம்பெனிக்கும் ஒருபொது சமையற்கூடமும் உணவு வசதிகளும்உண்டு.ஆனால்அவர்களுக்குப் போதுமான உணவு தரப்படுவதில்லை. உடலை மறைக்க முழுதாக ஆடைகளும் வழங்கப்படுவதில்லை.

ஒரே ஒரு நீள வேட்டி, (Garment). அதைத்தான் அணிந்து கொள்ளவேண்டும். வெயிலோ, மழையோ, புயலோ, குளிரோ எதுவாக இருந்தாலும், ஆடை ஒன்று தான். அவலமும் துயரமும் ஆயிரம் ஆயிரமாக அமைந்திருந்தன.

உணவு பற்றாக்குறையாக இருப்பதால், மாணவர்கள் என்ன செய்வார்கள்? கொடுத்ததைத் தின்று விட்டு பசித்துக்