பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17Ο டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 1858ம் ஆண்டு, இவர் இங்கிலாந்திற்கு வந்து, ஆக்ஸ்போர்டு பகுதியில் ஒரு தனியான ஜிம்னேஷியத்தைத் தொடங்கினார். இவரது அரிய சேவையை அறிந்த அரசு, இராணுவ கடற்படை வீரர்களுக்குப் பயிற்சியளிக்கும் பொறுப்பை அளித்தது. மக்லாரன் தனது அனுபவங்களுடன் அரிய ஆய்வை மேற்கொண்டு, ஒரு புதிய நூலை எழுதி வெளியிட்டார். அது இராணுவ ஜிம்னாஸ் டிக்ஸ் பயிற்சி முறைகள் - ஆசிரியர்களுக்கான குறிப்புக்கள் என்பதாகும். இந்நூல் இராணுவ வீரர்களுக்கு ஏற்ற சிறந்த வழிகாட்டி நூலாக அமைந்திருந்தது. உடற்பயிற்சிகளுக்கான தேசீய முறைகள் கத்திச் சண்டையிடும் முறைகள் உடற்கல்வி முறைகள் என்னும், நூல்களையும் இவர் எழுதி வெளியிட்டார். விளையாட்டுக்களுக்கும் மேலாக, ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சிகள்தாம் இராணுவத்தினருக்கு உடல் திறனை வளர்க்கின்றன. விளையாட்டுக்கள் என்பவை பொழுது போக்குக்கு உரியவை (Recreational), ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சிகளே சிறந்தனவற்றைக் கற்பிக்கும் பெருமையை (Educational) உடையவை என்ற கொள்கையை மக் லாரன் கொண்டிருந்தார். இவர் வடிவமைத்துத் தந்த பயிற்சிகள் மக்லாரன் ஜிம்னாஸ்டிக்ஸ் என்று பொதுமக்களால் அழைக்கப்பட்டன. இராணுவத்தில் ஜிம்னாஸ் டிக்ஸ் பயிற்சிகளைப் பெற்றவர்கள் பள்ளிகளுக்குச் சென்று. இராணுவ முறையையே பின்பற்றிக் கற்றுத் தந்ததால், பயின்றவர் களுக்குப் பயிற்சிகள் மேல் வெறுப்பேற்பட்டது. மேலும், இராணுவப் பயிற்சி முறைதான் இறுதிக் காலம் வரை வரும்