பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 175 தனித்திறன் போட்டிகளை மிகுதியாக வளர்த்திட உதவியது. காமன் வெல்த் விளையாட்டுக்கள் என்ற ஓர் அமைப்பு, பிரிட்டிஷ காலணி நாடுகளுக்கிடையே நடைபெறுகிற விளையாட்டுப் போட்டிகளாக அமைந்தன. ஆடுகளங்களையெல்லாம் நிர்வகிக்க, நிர்மானிக்க, புனரமைப்புகள் செய்திட, ஆடுகள இயக்கம் (Playground movement) ஒன்று 1925ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. பொதுமக்கள் ஓய்வுக்காகவும், உல்லாசத்திற்காகவும் வெளிப்புற மைதானங்களில் வந்து விளையாடி மகிழ, திறமைபெற, வலிமை பெற உதவும் அமைப்பு ஒன்று, உடல் ஓய்வு உல்லாசம் தரும் மத்தியக் கழகம் (Central Council of Physical Recreation) 96ūrgol 1935lbs),6for@ 5lpleut', Lt-l-gil. இளம் கிறித்தவர்கள் சங்கமும் (YMCA) அதன் கிளைகளாக விளங்கிய இளைஞர் விடுதிகளும், மற்ற பொதுசேவை நிறுவனங்களும், மக்களின் மனமகிழ் மன்றமாக செயல்பட்டு, மறுமலர்ச்சி யூட்டின. மெருகேறிய வளர்ச்சியைக் கூட்டின. நாட்டுமக்கள் அனைவருக்கும் இலவச மருத்துவம், பரிசோதனை செய்து நலம் காக்கும் சட்டம் ஒன்று 1948ம் ஆண்டு அரசால் கொண்டுவரப்பட்டு செயல்படுத்தப்பட்டது. இதுபோல விளையாட்டு வளர்ச்சிக்கும் ஒரு மனிதர் கமிட்டி ஒன்று சர்ஜான் உல்பென்டன் ஏற்படுத்தப்பட்டு ஏற்றதொரு சீர்திருத்தத்தை மேற்கொண்டது. இவ்வாறு, இங்கிலாந்து நாட்டில் உடல்நலம், உடற் கல்வி, மனமகிழ் மன்றம், அதன் தொடர்பான செயல்கள் யாவும் ஒரு சீராக வளர்ந்து, உயர்ந்த இலட்சியத்தை எட்டிப்பிடித்து, இணையற்ற சரித்திரம் படைத்தது என்ற நல்ல