பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா செய்திகளையே இங்கிலாந்து வரலாறு நமக்கு வடித்துக் காட்டியிருக்கிறது. உடற்கல்வியைப் பாடமாக்கி, பொதுமக்களிடையே பாலமாக்கி உற்சாகம் ஊட்டிய உடற்கல்வி அமைப்பாளர்கள். கீழ்கண்ட கொள்கைகளை உடற்கல்வி மூலம் பெற்றதாகக் கூறியிருப்பதை கீழே நாம் காணலாம். அறிந்து மகிழலாம். 1. மக்களின் உடல், நலத்தில், உடல் வலிமையின் உச்சநிலையினை உடற்கல்வி வளர்த்துக் காட்டுகிறது. 2. சிறந்த ஒழுக்கங்கள், சீரான பழக்க வழக்கங்கள் சமூக நலம் பயக்கும் சேவை மனப்பான்மை, குழு ஒற்றுமை போன்ற வீரம், பொறுமை, நீதிக்கு அடிபணிதல். நட்புடன் பழகுதல் போன்றவற்றை உடல்கல்வி வளர்த்து விடுகிறது. 3. நல்ல திறம் வாய்ந்த தேகம், அது வழங்கும் இனிமையான வாழ்க்கையை எடுப்புடன் வாழுகிற இலட்சிய மனப்பாங்கை ஊட்டுகிறது. 4. விரைவில், சரியான முடிவெடுக்கும் ஆற்றலையும்; விரைந்து செயல்படும் வல்லமையையும் வழங்குகிறது. 5. நளினமான அசைவுள்ள நடை, நிமிர்ந்த தோரணை, அழகான இயக்கங்களை உடற்கல்வி வளர்கிறது. 6. உறுப்புக்களின் ஒருங்கினைந்த செயல்களை, செயல்களின் தேர்ச்சியினை, எழுச்சியினை வளர்த்து விடுகிறது. 7. உடலில் ஏதாவது குறையோ, நோயோ ஏற்பட்டால், அதனை நிவர்த்திக்கும் நேர்த்தியான வழி முறைகளையும் கற்பிக்கிறது.