பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2_ᏮᏇ & நாடுகளில் உடற்கல்வி 179 அறிவியல் முறையில் திட்டமிடப்பட்டு, தொழிலாளர் கள் எல்லாவிதத்திலும் முன்னேற்றம் பெற்று, உற்சாகமாக உழைப்பதற்கும், வலிமையாக நாட்டைக் காப்பதற்கும் ஏற்ற வகையில் உதவும் கல்வியை அவர்கள் உடல் கலாச்சாரம் என்று விளக்கமாகக் கூறினர். அதாவது, உடற்கல்வியைப்பற்றி விளக்கம் அளித்து, விளையாட்டுக்களில் ஆழ்ந்த பயிற்சிகளை அளித்து, உடல் நலத்திலும் சுகாதாரத்திலும் தேர்ந்த அறிவை வளர்த்து. தனிப்பட்ட முறையில் தேகவலிமையை வளர்த்து சமூகப் பண்புகளை செழிப்புடன் வளர்த்து. நாட்டிற்கு நல்ல கடமைகளாற்றும் இலட்சியப் பணிக்காக, உடற்கல்வி முறை பின்பற்றப்பட்டது. சோவியத் யூனியனில் எந்தக்காரியத்தைத் தொடங்கினாலும், சமுதாயம் வளர்ச்சியடைய வேண்டும் என்ற இலட்சியத்தை அடிப்படையாக வைத்து, அதன்மூலம் அரசியல் வளர்ச்சியின் ஆதாயத்தை எதிர்பார்த்தே செய்தனர். - விளையாட்டுக்கள் என்பது விளையாட்டுக்காகவே என்னும் இந்தக் கொள்கை, இங்கு ஏற்கப்படவில்லை. விளையாட்டுக்கள் என்பது மனதிருப்திக்காகவே, ஓய்வும் உல்லாசமும் பெறவே, உடல் அழகையும் நளினத்தையும் வளர்ப்பதற்காகவே என்ற கொள்கை மட்டுமல்ல நாட்டு மக்கள் எல்லோரும் பங்குபெற வேண்டும். எல்லோரும் தரமான திறமான உடலைப்பெற வேண்டும். சமுதாய அமைப்பில் செழுமையை உண்டாக்க வேண்டும். தனிப் பட்டவர்களின் செழுமை சமுதாய செழுமை என்ற முழுக் கண்ணோட்டத்துடனேயே அவர்கள் உடற்கல்வி முறையைக் கையாண்டனர். * ஆகவே, உடல் கலாசாரத்தில் பங்கு பெறுவது என்பது ஒவ்வொரு குடிமகனுடைய சமுதாயக் கடமை என்கிற