பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18O டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா கருத்தையே வற்புறுத்தி வெற்றி கண்டது. பணியாற்றும் தொழிலாளர்கள் பலத்துடன் விளங்கி, செயல்திறனில் குறையாமல், அன்றாட வேலைகளை ஆற்றலுடன் செய்தாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பில், அரசு அதிக அக்கறை காட்டியது. ஆர்வத்தை ஊட்டியது. இராணுவத்தில் சேவையாற்ற எப்பொழுதும் மக்கள் தயாராக இருக்க வேண்டும். அதே சமயத்தில் அரசியல் மற்றும் சமுதாய விழிப்புணர்ச்சியுடன் ஒரு போர் வீரன் போல தயார் நிலையில் வாழ வேண்டும் என்ற வலிமை மிக்கக் கொள்கையுடன் உடற் கல்வியை வளர்த்தனர். இந்தக் கொள்கையே சோவியத்தின் எழுச்சிக்கு சுடர்மிகு தூண்டுகோலாக விளங்குகிறது. உடல் துறை கலாச்சார உயர் மன்றம் (Supreme Council of Physical Culture) o Girol 1923b 2,6dor(9) 6TöLu(9).55L பட்டது. அதுபோலவே, கிராமத்தில், வட்டார அளவில், மாவட்ட அளவில், ஒவ்வொரு கலாச்சார மன்றமும் ஏற்படுத்தப்பட்டது. இத்தகைய மன்றங்கள் அனைத்தும் தலைமை மன்றத்தின் கட்டுப் பாட்டின் கீழ், கவனமாக இயங்கின. சோவியத் நாட்டின் பல்வேறு குடியரசு யூனியன்களில் இவ்வாறு ஏற்படுத்தப்பட்ட கலாச்சார மன்றங்கள், திட்ட மிட்டபடியே தெளிவான முன்னேற்றத்துடன் பணிபுரிந்து வந்ததைக் கண்ட அரசு, மேலும்பல முன்னேற்றம் காண, உயர்மன்றக் குழுவை மாற்றியமைத்தது, அதற்குப் பெயராக அனைத்து யூனியன் உடல்துறை கலாச்சாரம் மற்றும் solstostumi. Q losérplb (All Union Council of Physical Culture and Sports) என்ற பெயர் சூட்டப்பட்டது. இது நடந்தது 1930ம் ஆண்டில்.