பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா ஒவ்வொரு ஆசிரியரும் 4 ஆண்டுகள் பயிற்சி பெறு கின்றார்கள். ஒரு சில பயிற்சி நிறுவனங்கள், குறைந்த கால அவகாசத்தில் ஆசிரியர் பயிற்சிகளை அளித்தாலும், அதற்கும் குறைந்தது 2 முதல் 3 ஆண்டுகள் கட்டாயமாக உண்டு. பொதுமக்களுக்கு உடற்கல்வி பொதுமக்களுக்கு விளையாட்டுக்களைக் கற்பிக்கவும் விளையாட்டுக்களில் பங்கு பெற ஊக்கவிக்கவும் கூடிய அமைப்புகளாக விளையாட்டுச் சங்கங்கள் (Sports clubs) நாடு முழுவதிலும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. பல லட்சக்கணக்கான மக்களுக்கு ஆர்வம் ஊட்டியும், ஆற்றலை வளர்த்தும் இந்த சங்கங்கள் உதவுகின்றன. அதே சமயத்தில் உடற் கல்வி கலாசாரம் பற்றிய அறிவினை ஊட்டவும், எல்லா வயது மக்களும் வந்து கலந்து கொண்டு, வயது வித்தியாசம் பாராமல், தங்கள் திறமைக்கேற்ப தேகத்தைப் பயன்படுத்தி, மகிழச் செய்யும் வகையில் உடற் கல்வி பற்றிய பிரச்சாரம் சிறப்பான முறையில் நடத்தப்படுகிறது. பொது மக்கள் தங்கள் விளையாட்டுத் தாகத்தைத் தணித்துக் கொள்ளவும், வேகத்தை வளர்த்துக் கொள்ளவும், விவேகத்தை வளர்த்துக் கொள்ளவும் உதவுகின்ற வகையில் ஸ்டேடியம், மைதானங்கள், ஆடுகளங்கள். நீச்சல் குளங்கள், உள்ளாடும் அரங்கங்கள், பனிச் சறுக்கு மையங்கள், வெளிப்புற உல்லாச இடங்கள், விளையாட்டுப் பூங்காக்கள் முதலியவற்றை அரசே அமைத்துத் தந்திருக்கிறது. அரசு தருவதை மக்களும் ஏற்றுப் பயன்பெறுகின்றனர். இது சோவியத் யூனியனின் சிறப்பான வெற்றியாகும்.