பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா மாற்றப்படுவார்கள். அவர்களுக்கு விளையாட்டுப் Ġuq reti 66it (Master of Sports) 6T6ör D &q55]ü வழங்கப்படும். சிறந்த கெளரவம் அளிக்கப்படும். - இவ்வாறு சோவியத் யூனியன் முழுவதும், தேர்ச்சியுள்ள மக்களிடையே போட்டிகள் வைத்து, தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு நுண்திறன் பயிற்சிகளைக் கொடுத்து, பக்குவமாக வளர்த்து வருவதால்தான். சோவியத் வீரர்களும் வீராங்கனைகளும் ஒலிம்பிக் பந்தயத்தில் தங்கப்பதக்கங்களை வென்று குவிக்கின்றார்கள். சிறக்கின்றார்கள். உண்மையான உழைப்பு - திட்டமிட்டப் பயிற்சி - தெளிவான லட்சியம் தங்கப் பதக்கத்தைத் தானே வென்று கொடுக்கும். இதிலென்ன ஆச்சரியம் என்று நமக்குக் கேட்கத் தோன்றுகிறல்லவா! = விளையாட்டு நிறுவனங்கள் 7 வயது முதல் 10 வயது குழந்தைகளுக்கு ஒரு சங்கம் அதன் பெயர் அக்டோபரிட்ஸ் (Octobrists) -10 வயது முதல் 16 வயதுவரை உள்ள ஒரு சங்கத்திற்கு பயனிர் (Pioneer), 16 முதல் 25 வயதுவரை உள்ள ஒரு சங்கத்திற்கு காம்சோமால்ஸ் (Komsomals) 6T6örug.] QuuuTmgjib. இப்படிப்பட்ட 3 நிறுவனங்களும், குழந்தைகளுக்கு விளையாட்டு உணர்வினை மங்காமல் வளர்த்து விடுகின்றன. உடல் மற்றும் உள்ளத்தின் நுண்மையான பெருமையை உணர்த்தி பயிற்சியளிக்கின்றன. அத்துடன் நில்லாமல், கம்யூனிஸ்ட் கொள்கைகள் அவர்கள் மனதில் வேரூன்றும் வண்ணம் போதிக்கின்றன. சாதிக்கின்றன. மக்களுக்கு உடல் திறன்களை சோதித்தறியும் பரி சோதனைப் பயிற்சிகள் (Test) வைக்கப்பட்டு, அதில் தகுதி பெறுபவர்களுக்கு பாட்ஜ்களை அரசு வழங்குகிறது.