பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

...--" 188 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா பல்வேறு சூழ்நிலைகள் 1498ம் ஆண்டு கொலம்பஸ் என்பவர் அமெரிக்காவைக் கண்டுபிடித்தபிறகுதான், உலகத்திற்கே இப்படி ஒரு நாடு உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. புதிய நாடொன்றைக் கண்டதும், புதிதுபுதிதாக, L] 60 நாடுகளிலிருந்து அங்குபோய் குடியேற ஆரம்பித்தனர் ஆசையும் ஆர்வமும் கொண்ட மக்கள். ஐரோப்பா கண்டத்திலிருந்தும் குறிப்பாக இங்கிலாந் திலிருந்தும் பலர் வந்து குடியேற ஆரம்பித்தனர். வாழவந்தவர்கள் தங்கள் நாட்டின் மரபு கலாச்சாரம். பழக்க வழக்கங்கள், மொழிகள் இவற்றையும் சேர்த்தே கொண்டு வந்தனர். அங்கேயே பிறந்து வளர்ந்த மக்களுக்கு, வந்து குடியேறியவர்களைப் பிடிக்கவில்லை. அதனால் இரு தரப்பினருக்கும் இடைவிடாத போராட்டம் நிகழ்ந்து கொண்டேயிருந்தது. அவர்களையும் அடக்கி, அமெரிக்காவில் குடியேறியவர்களையும் மடக்கி, ஏற்படுத்தப் பட்ட இங்கிலாந்து ஆட்சி ஏறத்தாழ 175 ஆண்டுகாலம் அமெரிக்காவில் இருந்தது. அதாவது அமெரிக்காவை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது. காத்தது. ஆரம்ப நாட்களில் அமெரிக்க மக்கள் அங்கிருந்த காடுகளை அழிக்க, அழகான வீடுகளை அமைக்க பொங்கியெழுந்த உள்நாட்டு மக்களை அடக்க, பல்வேறு விதமான மக்களுடன் வாழ்க்கையை அனுசரித்துப்போக;