பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 193 பள்ளிகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளைப் பார்த்துப் பேசினார். அந்த ஸ்வீடன் இளைஞரான நீல்ஸ் போசி (Nelis Posse) யையே ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிக்கும் பொறுப்பேற் குமாறு செய்தார், ஸ்வீடன் முறை ஆசிரியப்பயிற்சிப் பள்ளி ஒன்று மேரிஹேமன்வே செலவில் ஆரம்பிக்கப்பட்டது. அதன் இயக்குநராக நீலின் போசியே நியமிக்கப்பட்டார். இவ்வாறு, பள்ளிகளில் பயிற்றுவிக்க ஸ்வீடன் முறை உடற்கல்வி இடம் பெற்றது. - அதேபோல், வாஷிங்டன் நகரில், ஸ்வீடன் நாட்டு இளைஞர் ஒருவர் ஹார்ட்விக் நிசன் என்பவர் 1883ம் ஆண்டு, நலப் பயிற்சிப்பள்ளி (Health Institute) ஒன்றைத் தொடங்கினார். இவர் உடலைப் பதப்படுத்தும் (Massage) புதுமுறையைப் புகுத்தினார். இவரது ஆலோசனையின்படி வாஷிங்டன் பள்ளி களிலும் இந்தப் பயிற்சிமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. எது சிறந்தது? உயர்ந்தது? 19ம் நூற்றாண்டு இறுதியில் ஒருபிரச்சினை எழுந்தது. ஜெர்மன் ஜிம்னாஸ்டிக்ஸ் முறை உயர்ந்ததா? ஸ்விடன் நாட்டு ஜிம்னாஸ்டிக்ஸ் முறை உயர்ந்ததா? என்பது தான் அது. அதற்கிடையில் ஆடுகள @uéðið (Play ground movement) ஒன்று அமெரிக்காவில் தொடங்கி, மும்மரமான வேகத்துடன் மக்கள் மத்தியிலே பரவத் தொடங்கியது. ஓடுகளப் போட்டிகள் விளையாட்டுக்கள் அதிக அளவில் மக்களிடையே பிரபலமடைந்ததால், ஜிம்னாஸ் டிக்ஸ் பயிற்சிகள் இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டன.