பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா இவ்வாறாக அமெரிக்க உடற் கல்வி முறை மக்க ளிடையே பிரதான இடத்தைப் பெற்றுத் திகழ்ந்தது. டென்மார்க் முறை உடற்கல்வி 1925ம் ஆண்டு டென்மார்க் நாட்டிலிருந்து நீல்ஸ் புக் (Niels Bukh) என்பவர், தமது குழுவினருடன் அமெரிக்கப் பயணம் செய்து, தனது நாட்டு ஜிம்னாஸ்டிக்ஸ் முறைகளைச் செய்து காட்டினர். மக்கள் மகிழ்ந்தனர், பின்பற்றிச் செல்லவும் முனைந்தனர். என்றாலும், ஆடுகள இயக்கத்தின் வேகமும், அமெரிக்க மக்களின் தனித்திறன் போட்டிகளில் ஏற்பட்டதாகமும் சேர்ந்து, டென்மார்க்கு ஜிம்னாஸ்டிக்ஸ் முறையை, அமெரிக்காவில் வேரூன்ற முடியாமற் செய்து விட்டன. பிரான்ஸ் முறை உடற்கல்வி டெல்சார்ட்டே உடற்கல்வி முறை: (Delsarte System) என ஒரு கல்வி முறை பிரான்சிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி ஆகியது. முழுக்க முழுக்கப் பெண்களுக்கு உதவுகின்ற உடற்பயிற்சி முறையாக இருந்த இப்பயிற்சி முறைகளை, பிரான்ஸ் காய் டெல்சா என்பவர் கண்டு பிடித்திருந்தார். நடிப்புத் துறையிலும், வாய்ப்பாட்டு இசையிலும் ஆசிரியராகப் பணியாற்றிய டெல்சார்ட்டே, உதவி சாதனம் எதுவுமில்லாமல் உடலை மெதுவாக இயக்கிட இந்தப் பயிற்சிகளைச் செய்யலாம் என்னும் புதிய உத்தியுடன் வடிவமைத்திருந்தார். மன உணர்வுகளை வெளிப்படுத்துகிற பயிற்சிகள்; நளினமான அசைவுகளை வளர்த்திடும் பயிற்சிகள் என்பன போன்ற பெருமைகளை இம்முறைகள் கொண்டிருந்ததால்,