பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி - 195 நியூயார்க் நகரத்துப் பள்ளிகளில் இப்பயிற்சிகள் அதிகமாகவே இடம் பெற்றன. என்றாலும், இப்பயிற்சிகள் ஆணித்தரமாக வேரூன்ற இயலாமல், வந்தது போலவே கொஞ்ச காலம் வாழ்ந்து விட்டு, மறைந்து போயிற்று. ஆங்கில முறை உடற்கல்வி அடுத்து உள்ளே புகுந்தது ஆங்கில முறை உடற்கல்வி யாகும், ஆங்கிலேயர்கள் ஓடுகளப் போட்டிகள், கால் பந்தாட்டம், டென்னிஸ், கோல்ப், படகுப் போட்டி போன்ற விளையாட்டுக்களை வளர்த்ததுமன்றி, அவற்றை அமெரிக்காவிலும் அறிமுகப்படுத்தினர். ஆங்கிலேயர்கள் விளையாட்டான ரவுண்டர்ஸ் (Rounders) என்ற ஆட்டத்திலிருந்து உருவான தளப்பந்தாட்டமே (Base Ball) இன்று அமெரிக்காவின் தேசிய ஆட்டமாக விளங்குகிறது. அமெரிக்க விளையாட்டுத்துறை மற்றும் உடற்கல்வி யின் வளர்ச்சிக்குப் பெரிதும் உழைத்த பெரும் நிறுவனமாகப் போற்றப்படுவது இளம் கிறித்துவர் கழகமாகும். (YMCA) இளம் கிறித்துவர் கழகம் 1841ம் ஆண்டு ஜார்ஜ் வில்லியம் என்பவரால், சிறிய அளவில் இக்கழகம் தொடங்கப் பெற்றது. கிறித்தவ இளைஞர்கள் ஓரிடத்தில் ஒன்று கூடி, பைபிளைப் படிக்கவும், ஜெபம் செய்யவும் கூடிய வாய்ப்பினை நல்கும் நல்லதொரு அமைப்பாக முதலில் ஆரம்பிக்கப்பட்டது. 1841ம் ஆண்டு பாஸ்டனில் இளம் கிறித்தவக் கழகம் தொடங்கப் பெற்றது. மிகக் குறுகிய காலத்தில் 200க்கு W